சிவகாசி: தொழில் நகரான சிவகாசி எப்போதும் மக்கள் நெருக்கடியில் திணறும். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, ஊரடங்கு ,பின்பு சில தளர்வுகளுக்குப்பின் மக்கள் இயல்பு வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பிக் கொண்டுள்ளது.
பட்டாசு ஆலைகள், தீப்பெட்டி ஆலைகள், அச்சகங்கள் செயல்படத்துவங்கினாலும், இன்னும் மந்தமான நிலையே உள்ளது.
இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக, சென்னையிலிருந்து விருதுநகர் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கானோர் வந்திருப்பதால், கிராமப்பகுதிகள் வைரஸ் தொற்று பரவி வருவதாக சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் தகவலை பரப்பி வருகின்றனர். இதனால், பொது மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது.
மேலும் கிராமப் பகுதிகளிலிருந்து வந்து செல்லும் மக்கள் குறைவான எண்ணிக்கையில் இருப்பதால், கிராமங்களுக்குச் செல்லும் பஸ்களும் குறைவாகவே இயக்கப்படுகிறது. இதனால் மதியம் முதல் மாலை வரை பஸ் நிலையங்களில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே உள்ளது.
வைரஸ் தொற்று அச்சம் ஒரு பக்கம், வதந்திகளால் ஏற்படும் அச்சம் ஒரு பக்கம் மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்டு வருகிறது.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை