
பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாய குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு ரூ 6,000 வீதம் 3 தவணைகளில் மத்திய அரசு வழங்கி வருகிறது.
முதல் தவணை டிசம்பர் மற்றும் மார்ச் மாதங்களுக்கும், இரண்டாவது ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களுக்கும், மூன்றாவது தவணை ஆகஸ்ட் மற்றும் நவம்பர் மாதங்களுக்கும் இடையே அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இது வரை 7 தவணைகளில் சுமார் 11 கோடி விவசாயிகள் இத்திட்டத்தால் பயனடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது வரை நீங்கள் பி.எம் கிசான் திட்டத்தில் இணையவில்லை என்றால் கீழே வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி பி.எம் கிசான் திட்டத்தில் இப்போதே இணைந்திடுங்கள்…!
ஆன்லைன் மூலம் பிஎம் கிசான் திட்டத்தில் இணைவது எப்படி?
முதலில் பி.எம் கிசான் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியான https://pmkisan.gov.in/ -க்கு செல்லவும்.
பின் Farmers corner பகுதியில் “New registration option” என்பதை கிளிக் செய்யுங்கள்
பின் அதில் உங்களின் AATHAAR எண்ணை பதிவிடுங்கள் பின் உங்களுக்கான புதிய விண்ணப்ப படிவம் திரையில் தோன்றும்.
விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டிருக்கும் அனைத்து விவரங்களையும் சமர்ப்பிக்கவேண்டும்.
கடைசியாக submit என்பதை கிளிக் செய்யுங்கள்.
பின் நீங்கள் கிசான் திட்டத்தில் விண்ணப்பித்தர்கான பதிவு எண் reference number வழங்கப்படும்.
விண்ணப்ப படிவத்தை நேரடியாக பெற இங்கே கிளிக் செய்யுங்கள் –