
நடிகை கெஹானாவின் உண்மையான பெயர் வந்தனா திவாரி என்பதாகும். இவர் டிவி ஷோக்களை ஹோஸ்ட் செய்து வந்ததோடு மாடலிங்கும் சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார்.
இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் இவர்தான் இப்போது ஆபாசப் பட விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். மும்பை போலீஸ் அவரை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் என்று தெரிகிறது.

தங்களைக் கட்டாயப்படுத்தி ஆபாசப் படங்களில் நடிக்க வைத்ததாக மும்பை போலீசில் 3 பேர் புகாரளித்தனர். புகாரை அடுத்து, விசாரணை மேற்கொண்ட மும்பை போலீஸ், கெஹானா உள்ளிட்ட சிலரைக் கைது செய்திருக்கிறது.
இதுகுறித்து பிரபல ஆங்கில நாளிதழிடம் பேசிய மும்பை போலீஸ் அதிகாரி ஒருவர், `கெஹானா இதுவரை 87 வீடியோக்களை ஷூட் செய்து அவரது வெப்சைட்டில் அப்லோட் செய்திருக்கிறார்.
சப்ஸ்கிரைபர்கள் மட்டுமே பார்க்க முடிகிற அந்த வெப்சைட்டுக்கு, ஒருவர் சப்ஸ்கிரைப் செய்ய ரூ.2,000 வரை கட்டணமாகச் செலுத்த வேண்டும்” என்று கூறியிருக்கிறார். இந்த விவகாரம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.