கடந்த ஆண்டு வெளியான திரௌபதி திரைப்படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து, இயக்குனர் மோகன் ஜி சத்ரியன் ‘ருத்ர தாண்டவம்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்த ருத்ர தாண்டவம் திரைப்படத்தில், ரிச்சர்ட் ரிஷி, தர்ஷா குப்தா, இயக்குனர் மற்றும் நடிகர் கவுதம் வாசுதேவ் மேனன், தம்பி ராமையா, ராதாரவி, மாளவிகா அவினாஷ், மாரிமுத்து, ஒய் ஜீ மகேந்திரன், மனோபாலா, ராம்ஸ், ஜெயம் எஸ்.கே கோபி, தீபா, காக்கா முட்டை விக்னேஷ் உட்பட பலரும் நடித்துள்ளனர். படத்திற்கு ஜூபின் இசையமைத்து இருக்கிறார்.
இந்த படம் கடந்த 1 ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்கில் வெளியானது. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ரசிகர்களிடையேயும் அமோக வரவேற்பு பெற்றது.
மேலும், ருத்ர தாண்டவம் படம் வெளியாகி 3 நாட்களில் 7.25 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படம் மூன்று நாளில் எல்லோருக்கும் லாபம் கொடுத்த பிளாக்பஸ்டர் படம் என்றும் திரையுலகில் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இன்று இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ள ருத்ரதாண்டவம் திரைப்படம் 252 திரையருங்களில் வெற்றிநடை போடுவதாக படத்தின் இயக்குனர் மோகன் ஜி சத்திரியன் தெரிவித்துள்ளார்.
இதனை அவரின் டிவிட்டர் பதிவில், “252 திரையரங்குகளில் இரண்டாவது வாரம்… இவ்வளவு பெரிய வெற்றியை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அவரின் மற்றும் ஒரு பதிவில், “ருத்ரதாண்டவம் திரைப்படத்தை தயாரிக்க உடன் இருந்து, படத்தை பெரும் அளவில் மக்களிடையே திரையரங்குகள் வாயிலாக மக்களிடம் கொண்டு சேர்த்த 7GFilmsSiva அவர்களுக்கு இந்த நேரத்தில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கும் நன்றி” என்று இயக்குனர் மோகன் ஜி சத்திரியன் தெரிவித்துள்ளார்.
#RudraThandavam has grossed a huge ₹ 7.25 Crs in 3 days in TN..
— Ramesh Bala (@rameshlaus) October 4, 2021
Thunderous Opening..
252 திரையரங்குகளில் இரண்டாவது வாரம்… இவ்வளவு பெரிய வெற்றியை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ❤️ #ருத்ரதாண்டவம் #RudraThandavam pic.twitter.com/NzEGsi1vwQ
— Mohan G Kshatriyan (@mohandreamer) October 8, 2021
#ருத்ரதாண்டவம் திரைப்படத்தை தயாரிக்க உடன் இருந்து, படத்தை பெரும் அளவில் மக்களிடையே திரையரங்குகள் வாயிலாக மக்களிடம் கொண்டு சேர்த்த @7GFilmsSiva அவர்களுக்கு இந்த நேரத்தில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கும் நன்றி
— Mohan G Kshatriyan (@mohandreamer) October 8, 2021