
எந்தத் தொந்தரவும் இல்லாமல் தூங்குவதற்கு, ஹாங்காங்கில் ஒரு உள்ளூர் டூர் ஏஜன்சி தனிப்பட்ட ஒரு பேருந்து சர்வீசைத் தொடங்கியுள்ளது.
52 மைல் செல்லும் இந்த பயணம், ஹாங்காங் வாசிகள் நிம்மதியாக ஓய்வெடுக்க, தொந்தரவு இல்லாமல் தூங்க உதவியாக இருக்கிறது.
நீண்ட பயணம் செல்லும்போது கொஞ்சம் நேரம் நம்மை அறியாமலேயே தூங்கும் வழக்கம் உள்ளது. ஆனால், தூங்குவதற்காகவே ஒரு பேருந்து பயணத்தை மேற்கொள்வீர்களா? ஐந்து மணி நேரம் செல்லக்கூடிய பயணத்துக்கு டூர் ஏஜென்சி ஒரு டபுள்-டெக்கர் பேருந்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
லோயர் டெக்கில் உள்ள இருக்கைகளுக்கான டிக்கெட்டின் விலை $12 மற்றும் அப்பர் டெக்கில் உள்ள இருக்கைகளுக்கான டிக்கெட்டின் விலை $51.
“Bus ride to nowhere” என்ற இந்த திட்டத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. உளு டிராவல்சின் தலைவரான ஃபிராங்கி சௌவ் தான் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
பயணிகளுக்கு தொந்தரவு இல்லாமல் இருக்க வேண்டும் மற்றும் இடையில் பயணிகள் தூக்கம் தடைபடக் கூடாது என்பதற்காக குறைவான டிராஃபிக் சிக்னல் இருக்கும் ரூட்டை தேர்ந்தெடுத்துள்ளார்.
செய்தியாளர்களுக்கு இதைப் பற்றி பேட்டியளித்த ஃபிராங்கி, இந்த திட்டத்தை இரண்டு வகையான பயணிகளுக்காக உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார்.
பலரும் இன்சோம்னியா என்ற தூக்கமின்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, அவர்களுக்கு தேவைப்படும் போது சில மணி நேரங்களாவது தூங்குவதற்கு அமைதியான இடம் தேவைப்படுகிறது. எனவே, எந்த விதமான தொந்தரவும் இன்றி நிம்மதியாக தூங்குவதற்கு இந்த பேருந்து டூர் உருவாகப்பட்டுள்ளது.
மேலும், ஹாங்காங்கை சுற்றிப் பார்க்க விரும்புபவர்கள், எந்த கட்டுப்பாடும் இல்லாமல் சுற்றிப் பார்க்க விரும்பினால், அவர்களுக்கும் இது வசதியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
அனைவரும் வீட்டில் சரியாக உறங்குவதில்லை. மேலும், ஒவ்வொரு ஹாங்காங்கருக்கும் மன அழுத்தம் இல்லாமல் இல்லை. எனவே, இந்த ட்ரிப்பில் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.
5 மணி நேரம் தூங்குவதற்கு அல்லது அமைதியான பயணத்துக்கு $12 கட்டணம் செலுத்துவார்களா என்று கேள்வியும் எழும். ஆனால், ஹாங்காங்கில் அறிமுகமாகி இருக்கும், சில நேரம் அமைதியாக அல்லது நிசப்தமான இடத்தில் நிம்மதியாக இருப்பதற்காகக் கட்டணம் செலுத்துவது புதிதல்ல.
ஏற்கனவே, தென் கொரிய நாட்டில் மன அழுத்தத்திற்கான சிகிச்சை முறைகளாக, “seeking solace in cafes” என்ற கஃபேக்களில் தனிமையாக இருக்கும் திட்டங்கள் உள்ளன. டைம் ஸ்லாட்டுகள் அடிப்படையில் நீங்கள் முன்பதிவு செய்யலாம்.
மேலும், ஜப்பானிலும் சைலன்ட் கஃபேக்கள் மிகவும் பிரபலமானவை. பலரும், சில நிமிடங்களாவது தனிமையில் இருக்க விரும்புகிறார்கள்.