
Realme பிராண்டின் மற்றொரு சமீபத்திய ஸ்மார்ட்போன் தொடர் இந்திய சந்தையில் வரத் தயாராக உள்ளது. Realme 9 சீரிஸ் மிக விரைவில் தொழில்நுட்ப சந்தையில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று அறியப்படுகிறது.
Realme 9 சீரிஸ் நான்கு வெவ்வேறு மாடல்களை அறிமுகப்படுத்தலாம் என்று பல கசிவுகள் கூறுகின்றன. இந்த சீரிஸ் 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்படலாம் என்பதும் கசிவிலிருந்து வெளிவருகிறது.
ரியல்மி நிறுவனம் விரைவில் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய 9 சீரிஸ்- ரியல்மி 9, ரியல்மி 9 ஐ, ரியல்மி 9 ப்ரோ மற்றும் ரியல்மி 9 ப்ரோ பிளஸ் என நான்கு மாடல்களை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் புதிய ரியல்மி 9 சீரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம்.
இந்த நிலையில், ரியல்மி 9 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் பி.ஐ.எஸ். சான்று பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக அக்டோபர் மாத வாக்கில் ஆர்.எம்.எக்ஸ்.3393 எனும் மாடல் நம்பர் கொண்ட ரியல்மி ஸ்மார்ட்போன் விவரங்கள் ஐ.எம்.இ.ஐ. வலைதளம் மற்றும் யூரேசியன் எகனாமிக் கமிஷன் வலைதளங்களில் இடம்பெற்று இருந்தது.

ரியல்மி ஸ்மார்ட்போன்
தற்போது ஆர்.எம்.எக்ஸ்.3392 எனும் மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் விவரங்கள் பி.ஐ.எஸ். வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி 9 ப்ரோ எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
புதிய 9 சீரிஸ் மட்டுமின்றி ரியல்மி நிறுவனம் ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போனினை பல்வேறு சந்தைகளில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பல்வேறு டாப் எண்ட் அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.