சிக்ஸ் பேக் எடுத்தே தீருவேன்.. ஹாட் ஒர்க் அவுட் செய்யும் பூனை!

அடடே... அப்படியா? உலகம் சற்றுமுன்
cat - 2026

உடல் எடையை பராமரிக்கவும் , உடல் ஆரோக்கியத்துடன் இருக்கவும் மனிதர்கள் உடற்பயிற்சி மேற்கொண்டு ஜிம் செல்வதை கண்டிருப்போம்.

ஆனால் இங்கு மனிதர்களுக்கே சவால் விடும் அளவிற்கு பூனை ஒன்று உடற்பயிற்சி கூடம் சென்று ஒர்க் அவுட் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சீனாவில் உள்ள ஜினிங் நகரில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் ஒரு பூனைக்குட்டி ஒன்று சிட்-அப் செய்து அசத்துகிறது. இந்த வீடியோவை அதன் உரிமையாளர் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

உடற்பயிற்சி கூடத்தில் சிட்-அப் செய்து தனது உடலை கட்டுக்கோப்பாக வைக்க நினைக்கும் பூனைக்கு இணையவாசிகள் நகைச்சுவையாக வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.