
சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் (Viral Video) ஆகின்றன. சமீபத்திய நாட்களில் பாம்புகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன.
தற்போது ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இது பல்வேறு சமூக வலைதளங்களில் அதிகம் பார்க்கப்பட்டு, பகிரப்பட்டு வருகின்றது.
இந்த வீடியோ, திடீரென நேருக்கு நேர் பார்த்து சந்தித்துக்கொள்ளும் மூன்று ராஜா நாகப்பாம்புகளைப் பற்றிய வீடியோவாகும்.
சில மணி நேரங்களில் இந்த வீடியோ ஆயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டது. நெட்டிசன்களும் இந்த வீடியோவுக்கு (Snake Video) பல விதமான கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.
வைரலாகி வரும் இந்த வீடியோ ஒரு காட்டில் எடுக்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. இதில், மூன்று ஆபத்தான ராஜ நாகப்பாம்புகள் காணப்படுகின்றன.
இவை மூன்றும் எதிர்பாராத விதமாக, திடீரென ஒன்றையொன்று சந்தித்துக்கொள்கின்றன. இதன் பிறகு வீடியோவில் நாம் பார்க்கும் காட்சி நம்மை அதிசயிக்க வைக்கின்றது.
சுமார் பத்து அடி நீளமுள்ள ராக நாகங்கள், கழுத்தை உயர்த்தி சண்டையிடும் தோரணையில் இருப்பதைக் காண முடிகின்றது.
எனினும், எந்த நாகமும் (King Cobra) மற்ற நாகத்தை தாக்கவில்லை. மூன்றும் ஒன்றை ஒன்று பார்த்துக்கொண்டே இருக்கிறது.
மூன்று பாம்புகளில் குறிப்பாக, ஒரு பாம்பின் ரியாக்ஷன் பார்ப்பதற்கு சுவாரசியமாக உள்ளது.
எப்போது வேண்டுமானாலும் மூன்று நாகங்களுக்கும் இடையில் சண்டை மூளலாம் என்ற நிலையில், வீடியோ நிறைவு பெறுகிறது.
அடுத்து என்ன நடந்ததோ என்ற பதட்டம் காண்பவர்கள் மனங்களை பற்றிக்கொள்கிறது.
இந்த வீடியோ helicopter_yatra என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.