ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த படைப்பான ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன், இந்தாண்டு தொடக்கத்தில் சீனாவில் அறிமுகமானது.
விரைவில் இந்தியா உட்பட பல நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதில் புதிய டிசைன், முதன்மை அம்சங்கள், புதிய ஸ்னாப்டிராகன் 8 Gen 1 பிராசஸர் உள்ளது. ஆனால் 10 ப்ரோ மிகவும் நீடித்த ஆயுள் கொண்ட ஸ்மார்ட்போனாக இல்லை என ரிவியூவ் வாயிலாக தெரியவந்துள்ளது.
யூடியூப் ரிவ்யூவரான Zack Nelson தனது JerryRigEverything சேனலில், OnePlus 10 Pro ஸ்மார்ட்போனின் டூரபிலிட்டி சோதனையை மேற்கொண்டார்.
அப்போது, அதனை வளைக்க முயற்சித்தபோது எதிர்பாராத வகையில் OnePlus 10 Pro ஸ்மார்ட்போன் கிட்டத்தட்ட பாதியாக உடைந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
கீறல் சோதனை உட்பட மற்ற சோதனைகளை பார்க்க விரும்பாதோர், நேரடியாக செல்போனை வளைக்கும் சோதனையை 6:57 இல் பார்க்கலாம்.
வீடியோவில், நெல்சன் முதலில் ஸ்மார்ட்போனை அதன் பின்புறத்தில் வளைப்பதைக் காணலாம். அப்போது, உறைந்த கருப்பு பேக்கில் விரிசல்லவருவதை காணமுடிகிறது.
இந்த விரிசல் கோடுகள் கேமராவுக்கு கீழே, பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் இடத்திற்கு மேலே வருகிறது. இந்த ஏரியா, சாதனத்தின் பலவீனமான பகுதியாக கருதப்படுகிறது.
சுவாரஸ்யமாக, செல்போன் கிட்டத்தட்ட இரண்டாக உடைந்த பிறகு, டிஸ்பிளே உட்பட செல்போனின் பயன்பாடுகள் சீராக இருந்தது.
தொடர்ந்து, நெல்சன் செல்போனை மறுபக்கத்தில் இருந்து வளைத்து பார்த்தபோது, போன் முற்றிலும் பாதியாக உடைந்து, கிட்டத்தட்ட இரண்டு வெவ்வேறு துண்டுகளாக பிரிந்தது. விநோதமாக, செல்போன் உடைந்த பிறகும், பிளேஷ்லைட் எரிவதை காண முடிந்தது.
ஒரு கட்டத்தில், செல்போன் மொத்தமாக செயலிழந்துவிட்டது. பெரும்பாலான செல்போன்களை வெறும் மனித கைகள் மூலம் வளைத்தால் உடைக்க முடியாது என்று குறிப்பிட்ட நெல்சன், நீண்ட ஆயுளை கொண்ட ஸ்மார்ட்போனாக ஒன்பிளஸ் 10 ப்ரோ இருக்காது என கூறினார்.
மேலும் வீடியோவில், OnePlus 10 Pro மற்ற ஸ்மார்ட்போன்களை காட்டிலும் மெல்லிய மெட்டல் பிரேமைக் கொண்டுள்ளது என தெரிவித்தார்.