நிமிர்ந்து நில் துணிந்து சொல்”என்ற வாசகம் அடங்கிய உதவி மையங்கள் கொண்ட ஸ்டிக்கரை கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் மக்கள் கூடும் பொது இடங்களில் ஒட்டியுள்ளனர்.
அதில் சைல்டு ஹெல்ப் லைன் நம்பர் 1098, பள்ளிக் குழந்தைகளுக்கான உதவி எண் 14417, பெண்களுக்கான உதவி எண் 181 ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இந்த ஸ்டிக்கர் விழிப்புணர்வுக்கு மக்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டத்தை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுகுறித்த விழிப்புணர்வு விரைவில் ஏற்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.