எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களை அனைத்து வகையான டிஜிட்டல் மோசடிகளில் இருந்தும் பாதுகாக்கும் வகையில் அவ்வப்போது பல எச்சரிக்கை செய்திகுறிப்புகளை வெளியிடும்.
சமீபத்தில் கூட பிஷிங் தாக்குதல்கள் குறித்து பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களை எச்சரித்து இருந்தது. தங்களுடைய பணத்தை பாதுகாக்க ஃபிஷிங் தாக்குதல்களுக்கு எதிராக வாடிக்கையாளர்கள் என்னென்ன தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை பட்டியலிட்டு இருந்தது.
அதே போல், மோசடியாளர்கள் டெக்ஸ்ட் மெசேஜ் மூலமாக அனுப்பி லிங்க் அனுப்புவார்கள். “ஏதேனும் ஒரு விஷயத்தை வெரிஃபை செய்கிறோம் என்ற பெயரில் கேட்கப்படும் ஓடிபி விவரத்தை, அடையாளம் தெரியாத நபரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். அது மோசடியாக இருக்கும்” என்று தெரிவித்திருந்தது.
அந்த வரிசையில் தற்போது தனது வாடிக்கையாளர்களுக்கு மற்றொரு முக்கிய அல்ர்ட்டையும் எஸ்பிஐ விடுத்துள்ளது.
தொழில்நுட்பங்கள் பல பெருகியுள்ள நிலையில், பல்வேறு தளங்கள் மூலமாக மோசடியாளர்கள் ஊடுருவி வாடிக்கையாளர்களின் தகவல்களையும், பணத்தையும் திருடி வருகின்றனர்.
அதனால் வாடிக்கையாளர்களை மோசடியாளர்கள் ஏமாற்றுவதைத் தவிர்க்கும் வகையில், எஸ்பிஐ எச்சரிக்கைகளையும் வெளியிடும் அந்த வகையில் இந்த முறை எஸ்பிஐ வெளியிட்டு இருக்கும் எச்சரிக்கை
எந்த சூழ்நிலையிலும் குறிப்பிட்ட இணைப்புகளை (links) கிளிக் செய்ய வேண்டாம் என்பது தான். அதாவது குறுஞ்செய்தியின் கீழ் உள்ள உட்பொதிக்கப்பட்ட இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கிறது.
உங்கள் அக்கவுண்டை புதுப்பிக்க, பாஸ்வேர்டை புதுப்பிக்க, கேயுசி அப்டேட் என்ற பெயரில் உட்பொதிக்கப்பட்ட இணைப்புகளைக் கிளிக் செய்வதன் மூலம் சில நேரங்களில் ஆன்லைன் மோசடிகள் நிகழ வாய்ப்புள்ளது என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
அப்படி இந்த சேவைகளை செய்ய வேண்டும் என்றால் எஸ்பிஐ அதிகாரப்பூர்வ ஆன்லைன் தளத்தில் சென்று முறையாக செய்யுங்கள் என வாடிக்கையாளர்களை அறிவுருத்தியுள்ளது.
அதே போல் QR குறியீடுகள் மூலம் நடைபெறும் மோசடிகள் குறித்து வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. QR குறியீடு யாரிடமிருந்தோ வந்தால் தவறுதலாக ஸ்கேன் செய்ய வேண்டாம் என்றும் குறிப்பிடுகிறது.
அவ்வாறு செய்தால் உங்கள் கணக்கில் இருந்து பணம் இழக்கப்படும் என்று எச்சரிக்கிறது.