spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?எச்சரிக்கை: வாட்ஸஅப் DPயில் மனைவி, குழந்தைகள் போட்டோ வைத்து உள்ளீர்களா..?

எச்சரிக்கை: வாட்ஸஅப் DPயில் மனைவி, குழந்தைகள் போட்டோ வைத்து உள்ளீர்களா..?

- Advertisement -

ஸ்மார்ட் போன் மூலம் அன்றாட அனைத்தை நடவடிக்கைகளையும் எடுத்து நண்பர்களுக்கு ஷேர் செய்து வருகிறோம்.

தினந்தோறும் ஒரு புகைப்படத்தையாவது போனில் எடுத்து அதை ஷேர் செய்வது, வாட்ஸ் அப்பில் டிபியாக வைப்பது, அதற்கு வரும் கமென்டுகளை பார்த்து பூரிப்பது என இன்று காலம் செல்கின்றன.

இது போல் போட்டோ, வீடியோ எடுப்பதன் மூலம் நிறைய குற்றங்களுக்கு துப்பு கிடைக்க உதவியாக இருந்தது என்பதை மறுக்க முடியாது.

சென்னையில் ஒரு பகீர் சம்பவம் நடந்துள்ளது. வாட்ஸ் அப் டிபியில் நமது புகைப்படத்தை மட்டும் வைக்காமல் கணவர், மனைவி, குழந்தைகள், சகோதர, சகோதரிகள் ஆகியோரின் புகைப்படங்களையும் வைக்கிறோம்.

சென்னை அயனாவரம் குன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் நந்தகுமார்.

இவர் சொந்தமாக இரு சக்கர உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர் தனது வாட்ஸ்ஆப் டிபியில் தனது மனைவியின் புகைப்படத்தை வைத்திருந்தார்.

அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர் அந்த போட்டோவை எடுத்து ஒரு நிர்வாண ஆணுடன் இருப்பது போன்று மார்பிங் செய்துள்ளார்.

மேலும், நந்தகுமார் மனைவியின் முகத்தை மாற்றி மார்பிங் செய்து பல்வேறு ஆபாச புகைப்படங்களையும் உருவாக்கியுள்ளார். சித்தரிக்கப்பட்ட ஆபாச புகைப்படங்களை பெண்ணின் கணவருக்கே வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பியுள்ளார் மர்மநபர்

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நந்தகுமார் மர்மநபருக்கு போன் செய்துள்ளார். அப்போது, ஆபாச புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் குறிப்பட்ட செல்போன் எண்ணுக்கு ஜிபேயில் பணம் அனுப்பும் படி கேட்டுள்ளார்ர்.

பணம் தராமல் நம்பரை பிளாக் செய்தால் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

இதனால் நந்தகுமார் மற்றும் அவரது மனைவி இருவரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து அயனாவரம் காவல்நிலையத்தில் தம்பதி இருவரும் புகார் அளித்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அயனாவரம் போலீசார் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் மர்மநபர் தேடி வருகின்றனர்.

குடும்ப புகைப்படங்களை டிபியாக வைக்க இயற்கை, சுவாமி படங்கள், சுற்றுலா தலங்கள் என எத்தனையோ இருக்கின்றன. ஒன்று பெண்களின் படங்களை டிபியாக வைக்காதீர்கள். இல்லாவிட்டால் உங்கள் போனில் உள்ள கான்டாக்ட்கள் தவிர வேறு புது நபர் யாரும் பார்க்காத மாதிரி செட்டிங் செய்து டிபியை வைக்கலாம்.

டிபியில் வைக்க இந்த முறைகளை பயன்படுத்துங்கள்
வாட்ஸ் அப்பில் வலது மேல் மூலையில் 3 டாட்டுகள் இருக்கும். அதை அழுத்தினால் சில மெனுக்கள் ஓபன் ஆகும். அந்த மெனுவில் Settings இல் account யை கிளிக் செய்து privacyயை அழுத்தவும். அதில் Who can see my personal info என இருக்கும். அதில் profile photo, status என இருக்கும். அதை கிளிக் செய்தால் everyone, my contacts, nobody என இருக்கும். இதில் my contacts கிளிக் செய்தால் உங்கள் கான்டாக்ட் லிஸ்டில் சேவ் ஆன எண்கள் மட்டுமே உங்கள் புகைப்படத்தை பார்க்க முடியும்.

இதில் ஸ்டேட்ஸை பார்ப்பதற்கும் my contacts, my contacts except, only share with என இருக்கும். இதில் my contacts except என்றால் உங்கள் கான்டாக்ட் லிஸ்டில் உள்ளவர்களில் நீங்கள் செலக்ட் செய்வோரை தவிர மற்றவர்கள் நீங்கள் போடும் ஸ்டேட்டஸ்ஸை காணலாம்.

அது போல் only share with என்றால் நீங்கள் செலக்ட் செய்யும் உங்கள் கான்டாக்டுகள் மட்டுமே பார்க்க முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe