
பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமணங்களின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
திருமணம் தொடர்பான பல வீடியோக்கள் இணையத்தில் வலம் வந்தாலும், அவற்றில் சில வீடியோக்களே மக்கள் மனதை கொள்ளைக்கொள்கின்றன. அப்படி ஒரு வீடியோதான் தற்போது பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த வீடியோவில் மணமகள் மற்றும் அவரது அண்ணனின் பாசத்தை காண முடிகின்றது. தங்கையை மணமகளின் கோலத்தில் கண்ட அண்ணன் உணர்ச்சிவசப்பட்டார்
தன் செல்லத் தங்கையை மணக்கோலத்தில் பார்த்த உடன் அவர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு கதறி அழுவதையும் வீடியோவில் காண முடிகின்றது. அண்ணன் அழுவதை பார்க்கும் மணமகளும் உணர்ச்சிவசப்படுகிறார்
இந்த அண்ணன் தங்கை பாசத்தை பார்த்த இணையவாசிகளும் உணர்ச்சிவசப்படுகிறார்கள்.
பொதுவாக தங்கள் சகோதரிகளில் சகோதரர்கள் தாயைக் காண்பது உண்டு. அதை உறுதி செய்வது போல, இந்த அண்ணன் தன் தங்கையில் காலில் கூட விழுகிறார். அண்ணன் தங்கை பாசத்தின் இந்த வீடியோ பார்ப்பதற்கு அழகாக உள்ளது.
அண்ணன் தங்கை பாசத்தின் இந்த உணர்வுபூர்வமான காணொளியை மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் அளவுக்கு அழகாக உள்ளது.
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் weddding_bells என்ற பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோ-வுக்கு ஏகப்பட்ட லைக்குகலும் வியூஸ்களும் கிடைத்துள்ளன.