
பாம்பு வீடியோக்கள் தான் இணையத்தில் அதிகம் பார்க்கப்படும் வீடியோவாக உள்ளது. இவை சில சுவாரஸ்யமாகவும் சில சமயம் திகிலாக இருப்பதால் மக்கள் அதிக அளவில் இதனை பார்க்க விரும்புகிறார்கள். அதனால் பாம்பு வீடியோக்கள் எளிதில் வைரலாகின்றன
சண்டை என்பது பூமியில் வாழும் எந்த ஒரு உயிரினத்தின் பொதுவான ஒரு இயல்பு. அது மனிதனாக இருந்தாலும் சரி, மிருகமாக இருந்தாலும் சரி, பறவையாக இருந்தாலும் சரி, பரஸ்பரம் சண்டையிடுவதை நாம் அடிக்கடி பார்க்கிறோம்.
இப்போது இதேபோன்ற ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் இரண்டு கொடிய ராஜ நாகப்பாம்புகள் மோசமாக பின்னிப் பிணைந்துள்ளதை காணலாம்.
இரண்டும் கடைசி மூச்சு வரை பரஸ்பரம் சண்டையிடுவதைக் காணலாம். இந்த பயங்கரமான காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வனப்பகுதியில் திடீரென இரண்டு ராஜ நாகப்பாம்புகள் நேருக்கு நேர் மோதிக் கொள்வதை சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் காணலாம்.
இதன் சண்டையை பார்த்தாலே இன்று இதில் இரு பாம்பு தான் பிழைக்கும் என்று என்னும் வகையில், இது வாழ்வா சாவா என்ற போராட்டமாக தெரிகிறது.
இது போன்ற பாம்புகளின் சண்டையை இதுவரை பார்திருக்கவே மாடோம் என்பது போல் இந்த சண்டை அவ்வளவு கொடூரமாக உள்ளது.
இந்த வீடியோ டெய்லி மெயில் என்ற யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இரு ராஜ நாகங்களும் கடைசி மூச்சு வரை சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று இதற்கு தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த திகிலூட்டும் வீடியோ இதுவரை 13 லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.