
மைக்ரோசாப்ட் நிறுவனம் மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் கோ 2 மாடலை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய லேப்டாப் தரமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த புதிய மைக்ரோசாப்ட் லேப்டாப் ஜூன் 7 முதல் அமெரிக்காவில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் விரைவில் அனைத்து நாடுகளிலும் மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் கோ 2 மாடல் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் கோ 2 ஆனது சேஜ், பிளாட்டினம், ஐஸ் புளூ மற்றும் சாண்ட்ஸ்டோன் நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த லேப்டாப் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் கோ 2 ஆனது 12.4-இன்ச் பிக்சல்சென்ஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 3:2 என்ற திரைவிகிதம், 1536 x 1024 பிக்சல்கள், 330 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான லேப்டாப் வெளிவந்துள்ளது.
புதிய மைக்ரோசாப்ட் மாடலில் குவாட் கோர் 11-வது ஜென் இன்டெல் கோர் ஐ5-1135ஜி7 சிபியு வசதி உள்ளது. எனவே இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு இன்டெல் ஐரிஸ் Xe கிராபிக்ஸ் வசதியை கொண்டு வெளிவந்துள்ளது மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் கோ 2 மாடல்.
குறிப்பாக மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் கோ 2 ஆனது விண்டோஸ் 11 ஹோம் மூலம் இயங்குகிறது. பின்பு மேக்புக் ஏர் சாதனத்தை விட சிறந்த வடிவமைப்புடன் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் கோ 2 மாடல்.
மேலும் இந்த புதிய சர்ஃபேஸ் லேப்டாப் கோ 2 மாடல் ஆனது 13.5 மணிநேரம் வரை பேட்டரி பேக்கப் வழங்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 720p HD f/2.0 வெப்கேம், டூயல் ஃபார்-ஃபீல்ட் ஸ்டுடியோ மைக்ஸ் மற்றும் டால்பி ஆடியோ பிரீமியம் ஆதரவுடன் கூடிய Omnisonic ஸ்பீக்கர்கள் போன்ற பல ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் கோ 2.
யுஎஸ்பி டைப்-சி போர்ட், யுஎஸ்பி டைப்-ஏ போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், சர்ஃபேஸ் கனெக்ட் போர்ட், வைஃபை 6, ப்ளூடூத் 5.1 உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் கோ 2 மாடல்.
மேலும் Windows Hello Sign-in, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல ஆதவுகளை கொண்டுள்ளது இந்த மைக்ரோசாப்ட் லேப்டாப்.
மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் லேப்டாப்
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் கோ 2 மாடலின் விலை $599.99 (இந்திய மதிப்பில் ரூ.46,500) ஆக உள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் கோ 2 மாடலின் விலை $699.99 (இந்திய மதிப்பில் ரூ.54,300) ஆக உள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் கோ 2 மாடலின் விலை $799.99 (இந்திய மதிப்பில் ரூ.62,000) ஆக உள்ளது.