கிழக்கு அந்தமான் கடலில் நேற்று முதல் 17 நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ளன – ஒரு பெரிய நிலநடுக்கத்திற்கான முன்னெச்சரிக்கையா?
- முனைவர் கு.வை.பாலசுப்பிரமனியன்,
முன்னாள் வானிலையாளர்
நேற்று, 04 ஜூலை 2022 காலை முதல் அந்தமான் கடலில் அந்தமான் தீவுகளுக்கும் சுமத்ராவிற்கு இடையே உள்ள அந்தமான் கடலில் இந்திய நேரப்படி கீழ் கண்ட நேரங்களில் [நேரம் (வலிமை)] 13.55.31 (4.5), 14.06.2022 (4.6), 14.37.07 (4.7), 15.02.41 (4.4), 15.25.24 (4.6), 15.39.25 (3.8) என ஆறு முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
அதன் பின்னர் 17.18.24 (4.6), 17.50.42 (4.4), 19.49.42 (4.3), 23.01.27 (4.4), 23.34.50 (4.2), 23.37.53 (4.1) ஆகிய நேரங்களிலும் இன்று 05.07.2022 காலை முதல்
00:03:30 (4.6), 00:46:59 (4.3), 01:07:05 (4.5), 01:30:41 (4.5), 01:48:12 (4.4), 02:13:44 (4.4), 02:34:10 (4.4), 02:54:49 (4.4), 04:45:07 (4.5), 05:57:04 (5.0), 08:05:04 (4.3)
என இதுவரை 17 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. 48 மணி நேரத்திற்குள்ளாக அடுத்தடுத்தடுத்து அந்தமான் கடலில் நிலநடுக்கங்கள் ஏற்படுவது ஒரு மிகப் பெரிய நிலநடுக்கத்திற்கான முன்னறிகுறிகள் எனச் சொல்லப்படும் preshocks ஆக இருக்கலாமோ என சந்தேகம் ஏற்படுகிறது.