திருநங்கைகளை தொடர்ந்து நரிக்குறவர் வாழ்க்கையிலும் மாற்றம்: கரூர் ஆட்சியர் நடவடிக்கை

Apr 15a “முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும்” – என்ற வள்ளுவத்திற்கிணங்க தான் நல்லமுறையில் நீதி, பரிபாலனம் செய்து மக்கள் எவ்வகையிலும் துன்பப்படாமல் காப்பாற்றும் அரசன் மனிதனாகப் பிறந்திருந்தாலும் மக்கள் அவரை காக்கும் காவல் தெய்வமாக கருதிப் புகழ்வார்கள். “அத்தகைய காக்கும் கடவுளாக மக்களை காத்து நல்வழிகாட்டிடும்; மக்களின் மனித தெய்வமாக வாழ்ந்து வரும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஊர் ஊராக சுற்றித்திரிந்த எங்களை வாழ வழிகாட்டிய அவர்களுக்கு என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம் என நரிக்குறவர்கள் புகழாரம்” Apr 15dமாண்புமிகு மக்களின் முதல்வர் அம்மா அவர்களின் சீரிய திட்டங்களினால் பல்வேறுதரப்பட்ட சமுதாயத்தினரும் சரிநிகராக வாழ்ந்திட வேண்டும் என சமுதாயத்தில் எவ்வித பாகுபாடுமின்றி எல்லோருக்கும் எல்லாவித திட்டங்களும் கிடைக்கவேண்டும் என்ற நோக்குடன் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு தற்பொழுது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் கரூர் மாவட்டத்தில் நரிக்குறவர்கள் தங்கள் பொருளாதார முன்னேற்றம் பெற்று சிறப்புடன் வாழ வேண்டும் என்ற நோக்குடன் அவர்களுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா, பசுமைவீடு, விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி என அரசின் அனைத்துத்திட்டங்களும் வழங்கி வருவதுடன் பொருளாதார முன்னேற்றத்திற்காக சுழல்நிதிகடன்களையும் மாண்புமிகு மக்களின் முதல்வர் அம்மா அவர்களின் ஆணைப்படி வழங்கப்பட்டு வருகின்றன. இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ச.ஜெயந்தி; தெரிவித்ததாவது கரூர் மாவட்டத்தில் 170 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக அரசுத்திட்டங்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டு விலையில்லா வீட்டுமனைப்பட்டாவுடன் பசுமைவீடு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு முதல்கட்டமாக 29 நபர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 20 நபர்களுக்கு வீடுகள் கட்டுவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நரிக்குறவர்களின் வாழ்வாதார முன்னேற்றம் பெற நலவாரியம் மாண்புமிகு முதல்வர் அவர்களால் துவக்கப்பட்டு தற்பொழுது 149 உறுப்பினர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நலவாரியத்தின் மூலம் 60 பயனாளிகளுக்கு சிறு தொழில் துவங்க, கல்வி உதவித்தொகை, விபத்து நிவாரணத்தொகை என ரூபாய் 5,30,000ஃ- மதிப்பீட்டில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் நலவாரியத்தின் மூலம் விபத்து காப்பீடுத்திட்டம், விபத்து நிவாரணம், இயற்கை மரணம் உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமணநிதியுதவி, மகப்பேறு உதவி, மூக்குக்கண்ணாடி வழங்கும் திட்டம், முதியோர் ஓய்வூதியம் என பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. Apr 15bமற்றும் ஓய்வ+தியத்திட்டத்தில் 10 நபர்களுக்கு மாதந்தோறும் ஓய்வ+தியம் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி அனைத்து குடும்பங்களுக்கும் புதிய குடும்பஅட்டை, வாக்காளர் அடையாள அட்டை வழங்கியதுடன் கரூர் மையப்பகுதியில் மகளிர் சுயஉதவிக்குழுவிற்கு அமைக்கப்பட்டுள்ள வணிகவளாக கட்டிடத்தில் 10 நபர்களுக்கு கடைகள் வழங்கப்பட்டு அதன்மூலம் சிறுதொழில் நடத்தி வருவதால் 10 குடும்பத்திற்குத்தேவையான பொருளாதார வளர்ச்சியை பெற்றுள்ளார்கள். மேலும் அவர்களுக்கு சிறுதொழில் கடன் வழங்குவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நரிக்குறவர்களின் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டுமென்ற நோக்குடன் அவர்களை கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதுடன் நேரடியாகவும் நகர் பகுதிகளுக்கு சென்று களஆய்வு மேற்கொண்டு அதிலும் பள்ளிக்குச்செல்லாமல் வியாபார பணிகளை மேற்கொண்ட குழந்தைகளையும் கண்டறிந்து அவர்களையும் பள்ளியில் சேர்த்து விடுதியின் மூலம் தங்கி படிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு தற்பொழுது பிள்ளைகள் முழுமையான அளவிற்கு பள்ளிப்படிப்பை தொடர்ந்து வருகிறார்கள். மேலும் அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக அரசின் திட்டங்கள் உடனுக்குடன் வழங்கப்படும். தகுதியுள்;ளவர்கள் அரசு திட்டங்களை பெற்று பொருளாதார முன்னேற்றத்துடன் சிறந்து விளங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.ஜெயந்தி; தெரிவித்தார். Apr 15cகரூர் ஊராட்சி ஒன்றியம் அரசு காலனியைச்சேர்ந்த கஜேந்திரன்; தெரிவிக்கையில் கரூரில் நான் ஐம்பது ஆண்டு காலமாக வசித்து வருகிறேன். எங்களுடைய குலத்தொழில் பாசி, பவழங்கள் விற்பனை செய்வது மட்டுமே தொழிலாக இருந்து வந்தது. அதுவும் ஊர், ஊராக சுற்றித்திரிந்துதான் பிழைக்கவேண்டிய நிலை இருந்து வந்தது. அதனால் பிள்ளைகளை படிக்க வைக்க முடியாமல் நிலையற்ற நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வந்தோம். புரட்சித்தலைவி அம்மா ஆட்சிக்கு வந்த பின்னர் தான் எங்களையும் மனிதர்களாக மனிதநேயத்துடன் அரவணைத்து எங்களுக்காக நிரந்தரமான வீடுகளை வழங்கியதுடன் ஒரே இடத்தில் சொந்தமாக தொழில் செய்வதற்கு கடனுதவி வழங்கி தொழில் செய்ய வழிகாட்டியதுடன் எல்லோரையும் போல் நாங்களும் நியாய விலைக்கடைக்குச் சென்று பொருட்கள் வாங்குவதற்காக குடும்ப அட்டை, வாக்களிப்பதற்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கியதுடன் தற்பொழுது எங்களால் நம்பமுடியாத அளவிற்கு எங்கள் வீட்டுப் பெண்கள் சௌரியமாக சமையல் செய்ய மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கி கனவு வாழ்க்கையை நிஜவாழ்க்கையாக மாற்றி அமைத்துக்கொடுத்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்களே. தற்பொழுது நான் நகரின் மைய பகுதியில் சொந்தமாக கடை நடத்தி வருகிறேன். அதற்கு காரணம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உத்தரவுப்படி அரசாங்க இடத்தில் கடை கட்டி தந்துள்ளதால் எனது குடும்பத்தாருடன் குலதொழிலான பாசி மற்றும் பவழங்கள் விற்பனை செய்து வருகிறேன். அதற்கு கடனுதவியும் அம்மா அவர்களே வழங்கியதால் நான் மட்டுமின்றி எங்கள் சமுதாயமே அம்மாவுக்கு நன்றிக்கடன் பட்டவர்களாகவே வாழ்வோம் என தெரிவித்தார். மணவாசி ஊராட்சியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் அவர்கள் தெரிவிக்கையில் கரூரில் நான் எனது தந்தை காலத்திலிருந்து வசித்து வருகின்றேன். எங்களது குலத்தொழில் பாசி மற்றும் பவழங்கள் விற்பனை செய்வது மட்டுமே தொழிலாக இருந்து வந்தது. கல்வியறிவு என்பதே எங்களுக்கு கிடையாது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக்கு வந்தபின் தான் எங்களது பிள்ளைகளுக்கு கல்வியறிவு பற்றிய அவசியம் தெரிந்தது. தற்பொழுது எங்களது பிள்ளைகளும் பள்ளியில் சேர்ந்து கல்வி கற்கின்றனர். நாங்கள் தான் கல்வி கற்க முடியாமல் போனாலும் எங்களது பிள்ளைகள் கல்வி கற்பதை பார்க்கும் போது மனதிற்கு சந்தோஷமாக உள்ளது. இந்தப் பெருமை புரட்சித்தலைவி அம்மா அவர்களையே சாரும். கல்வி மட்டுமின்றி நாங்கள் பொருளாதார முன்னேற்றத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்குடன் எங்களுக்கு தொழில் தொடங்க கடனுதவி வழங்கி புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உதவி செய்துள்ளார்கள். நாங்கள் ஊர், ஊராக சுற்றித்திரிந்த நிலை மாறி ஒரே இடத்தில் தொழில் செய்ய உதவி செய்த அம்மா அவர்களுக்கு என்றென்றும் கடமை பட்டவர்களாக இருப்போம். நியாய விலைக்கடையில் பொருட்கள் வாங்க குடும்ப அட்டை, வாக்களிப்பதற்காக வாக்காளர் அடையாள அட்டை வழங்கியதுடன் எங்களுக்கு நிரந்தரமாக வசிப்பதற்கு வீடுகள் கட்டிக்கொடுத்து சுயதொழில் செய்ய பொருளாதாரக்கடனுதவி வழங்கிய தங்க மனம் கொண்ட கடவுள் மாண்புமிகு அம்மா அவர்கள் தான் என தெரிவித்தார்.