தேஹ வாஸனையில் இரண்டாவதாகச் சொல்லப்படுவது “குணாதான ப்ராந்தி”..சரீரத்தை மிகவும் நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும் என்னும் இச்சையையே இது குறிக்கிறது.
சரீரத்தை மிகவும் நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதிலேயும், லெளகிகமானது மற்றும் சாஸ்திரீயமானது என இரண்டு விதம் இருக்கிறது.
“தேஹத்தில் சந்தனத்தைப் பூசிக்கொள்வது, பூமாலையை கழுத்தில் அணிவது போன்ற காரியங்களைச் செய்தால் நல்ல சுகந்தம் கிடைக்கும்
இதனால் சரீரம் மிகவும் நன்றாக இருக்கும் என்று நினைப்பது லெளகிக குணாதானம் ஆகும்.
தக்க சமயத்தில் தகுந்த கர்மாக்களைச் செய்தால் சரீரம் தேஜஸ்வியாக இருக்கும் என்பதால், அந்தந்தக் கர்மாக்களைச் செய்வது சாஸ்திரீயமான குணாதானத்தில் சேரும்.
ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்