இரவும் பகலும் காவல் காத்து சட்டம் – ஒழுங்கை நிலைநிறுத்திடும் மகத்தான பணி காவல் துறையினருடையது! அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்கள் அளித்துள்ள புகார்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தேன்.வள்ளுவர் வாக்கின்படி முறைசெய்து காப்பாற்றுவோம்!
– முகஸ் (மு.க.ஸ்டாலின்)
தர்மபுரி சென்றிருந்த விடியல் அரசு முதல்வர் ஸ்டாலின், அதியமான் கோட்டை காவல் நிலையத்தில், நேற்றிரவு திடீர் ஆய்வு நடத்தினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
சேலத்துக்கு வந்திருந்த ஸ்டாலின் தனது நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, இரவு காரில் தர்மபுரி சென்றார். அப்போது அதியமான் கோட்டையில் கூடியிருந்த கட்சியினர் அவரை வரவேற்றனர். தொடர்ந்து அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்குள் ஸ்டாலினின் கார் சென்றது.
காரிலிருந்து இறங்கிய ஸ்டாலின், காவல் நிலையத்திற்குள் சென்று, எஸ்.ஐ.,யின் இருக்கையில் அமர்ந்து ஆய்வு மேற்கொண்டார். காவல் நிலையத்திற்கு வந்த புகார்கள் குறித்தும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் ஓரிரு நிமிடங்கள் கேட்டறிந்தார்.
தொடர்ந்து போலீசாரின் குறைகள், கோரிக்கைகளைக் கேட்டறிந்த அவர் 10 நிமிடங்களில் காவல் நிலையத்திலிருந்து கிளம்பிச் சென்றார்.
ஸ்டாலின் நடத்திய போலீஸ் ஸ்டேஷன் போட்டோ ஷூட்டால் அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் பரபரப்பு நிலவியது.
முதல்வர் ஸ்டாலின் அடித்த சிக்ஸர்! அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் திடீர் விசிட்! ஆய்வாளர் இருக்கையில் அமர்ந்து ஆய்வு! குறைகளைக் கேட்டறிந்து காவலரின் நெஞ்சம் தொட்ட முதல்வர் ஸ்டாலின்!
– முகஸ் (முன்.களப்.ஸ்)