விடியல் அரசுக்கு உயர் நீதிமன்றம் குட்டு
“சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறியவர்களை வெளியேற்ற மத்திய அரசு பல விதிமுறைகளை தந்திருந்த போதும், அவற்றை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு தவறிவிட்டது. இன்னும் 3 மாதங்களுக்கு மத்திய உள்துறை சட்டம் ஒன்றை இயற்றி, சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்ற வேண்டும்” – சென்னை உயர்நீதிமன்றம் (27 செப்டம்பர்) தீர்ப்பு!
இந்த தீர்ப்பில், “சட்டவிரோத குடியேறிகள் ஆதார் அட்டை எப்படிப் பெற்றனர்? மாநில அரசு ஏன் இவர்களை வெளியேற்றாமல் காலம் தாழ்த்துகிறது? இந்த சட்டவிரோத குடியேறிகள் பல குற்றங்களை புரிந்தவர்களாக இருந்தும் அவர்களை ஏன் வெளியேற்றவில்லை?”
இது போன்ற கேள்விகளை மாநில அரசுக்கு எழுப்பியதோடு, “இனி இவர்களை அவர்களது தண்டனைக் காலம் முடியுமுன்னரே அவர்களை நாடுகடத்தும் ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்.
சிறையிலிருந்து வெளியே வந்ததும் அவர்களை அவர்களது சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
தேவைப்பட்டால் இவர்களுக்கென detention camps / holding camps தடுப்பு முகாம்களை ஏற்படுத்தவும். இவர்களால் சமூகத்துக்கு கேடு” என்று சாடியிருக்கிறார் நீதிபதி தண்டபாணி!
இன்னும் பல நிபந்தனைகளையும் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார் நீதிபதி. வரவேற்க வேண்டிய தீர்ப்பு.
விடியல் அரசு அடிபணிய வேண்டும்.
- செல்வ நாயகம்
‘Unscrupulous Elements’: Madras HC Directs MHA To Frame Laws Within 3 Months To Ensure Immediate Deportation Of Illegal Immigrants On Completion Of Sentence