பிப்ரவரி 25, 2021, 1:23 மணி வியாழக்கிழமை
More

  திருப்பாவை – 20 : முப்பத்து மூவர் (பாடலும் விளக்கமும்)

  Home ஆன்மிகம் திருப்பாவை திருப்பாவை - 20 : முப்பத்து மூவர் (பாடலும் விளக்கமும்)

  திருப்பாவை – 20 : முப்பத்து மூவர் (பாடலும் விளக்கமும்)

  மாசு நிரம்பிய ஜீவர்களுக்கு மறக்கருணை காட்டி அவர்களது குறைகளை நீக்கி அருளும் தூய்மைப் பொருளே, துயில் எழுவாயாக!

  andal-vaibhavam
  andal-vaibhavam

  ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாடலும் விளக்கமும்

  விளக்கவுரை: வேதா டி.ஸ்ரீதரன்

  முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
  கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!
  செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
  வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!
  செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்
  நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
  உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
  இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய். (20)

  பொருள்

  அமரர் துயர் துடைப்பதில் முதன்மையானவனாக விளங்குபவனே! பக்தர்களின் துயரங்களுக்கு முடிவு கட்டுபவனே, நீ எழுவாயாக! அனைத்து நற்குணங்களும் பொருந்தியவனே! அனைத்து ஆற்றல்களும் அமையப் பெற்றவனே!

  மாசு நிரம்பிய ஜீவர்களுக்கு மறக்கருணை காட்டி அவர்களது குறைகளை நீக்கி அருளும் தூய்மைப் பொருளே, துயில் எழுவாயாக! மங்களமே வடிவெடுத்த நப்பின்னைத் தாயே! சகல ஐசுவரியங்களும் நிரம்பியவளே! துயில் எழுவாயாக! உன்னை ஆட்கொண்ட அந்தக் கண்ணனுக்கு வெண்சாமரம் வீசி, திருமுகம் காட்டித் துயில் எழுப்புவாயாக. உங்கள் இருவரின் தரிசனத்தைப் பெற்று நாங்கள் ஆனந்த மழையில் நீராடக் காத்திருக்கிறோம். அருள்புரிவாய்.

  andal-srivilliputhur-1
  andal-srivilliputhur-1

  அருஞ்சொற்பொருள்

  முப்பத்து மூவர் அமரர் – முப்பத்து முக்கோடி தேவர்கள்

  கப்பம் – நடுக்கம்

  கலி – முடிவுக்குக் கொண்டு வருபவன், பெரு வீரன்

  செப்பம் – செம்மை

  திறல் – திறமை, ஆற்றல்

  செற்றார் – தீயவர், எதிரிகள் (அடியார்களுக்குத் தீங்கு செய்பவர்கள்)

  விமலன் – தூயவன்

  செப்பு – செம்புக் கலசம்

  அன்ன – போன்ற

  செவ்வாய் – செம்மையான வாய், சிவந்த வாய்

  மருங்குல் – இடை

  திரு – ஐசுவரியம், மகாலக்ஷ்மி

  உக்கம் – விசிறி

  தட்டொளி – கண்ணாடி (தட்டு ஒளி)

  நீராட்டு – (எங்களை) மகிழ்ச்சியடைய வைப்பாயாக

  முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்த்தல் –

  aandal 2
  aandal 2

  பகவானின் எத்தனையோ அவதாரங்கள் அசுர சம்ஹாரத்துக்காக நிகழ்ந்தவையே. இவை அனைத்தும் தேவர்களின் துயரையும், பக்தர்களின் துயரையும் துடைப்பதற்காக. வாமன அவதாரம், ராமாவதாரம் எனப் பல்வேறு நாமாக்களில் வெவ்வேறு அவதாரத்தைப் போற்றிய ஆண்டாள், இங்கு மொத்தமாக அனைத்து அவதாரப் பெருமையையும் பேசுகிறாள்.

  கப்பம் – கம்பனம்

  கம்பனம் என்றால் நடுக்கம். நடுக்