ஸ்டாலின் எப்பொழுதும் முதலமைச்சராக முடியாது – மு க அழகிரி.
- கலைஞருக்கு பிறகு திமுக தலைவராக மு க ஸ்டாலின் தொடர வேண்டும் என ஸ்டாலினிடமே கூறினேன்
- திமுகவின் எதிர்காலம் நீங்கள்தான் என ஸ்டாலினிடம் நேரிலேயே கூறினேன்
- அப்பாவிற்கு பிறகு நீங்கள்தான் திமுகவின் தலைவர் என முகஸ்டாலின் இடமே கூறினேன்
- திமுக தலைவராக உள்ள ஸ்டாலின் ஏன் எனக்கு துரோகம் செய்தார் என எனக்கு தெரியவில்லை
- ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவியை தர கலைஞர் என்னுடன் ஆலோசித்த போது தாராளமாகக் கொடுங்கள் என்று கூறினேன்
- திமுக.,விற்காக உழைத்த என்னை ஏன் கட்சியில் இருந்து நீக்கினார்கள் என எனக்கு தெரியவில்லை
- திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு எப்போது கட்சியில் சேர்ப்பீர்கள் என கலைஞரிடம் கேட்டேன் , இவர்களின் ஆட்டம் அடங்கட்டும் , பொறுத்திரு என்று கூறினார்
- திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக முடியாது
- திமுகவின் அடுத்த தலைவர் நீங்கள்தான் என ஸ்டாலினிடம் கூறியது அவரது மனசாட்சிக்கு தெரியும்
- கலைஞரைப் போல இன்னொருவர் பிறக்க முடியாது
- கலைஞரையே மறந்துவிட்டு தற்போது கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்
- கலைஞரின் பேச்சு , எழுத்து , அவரது அரசியல் சாதுரியம் யாருக்கும் கிடையாது
- எதையும் சந்திக்க தயாராக இருக்குமாறு ஆதரவாளர்களை கேட்டுக் கொள்கிறேன்
- நான் எனது முடிவை விரைவில் அறிவிப்பேன் , நான் எந்த முடிவை அறிவித்தாலும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்
- பல நேரங்களில் பல சோதனைகள் நேரலாம் , அதை கடந்து வந்திருக்கிறோம்
- நான் எப்போதும் உங்களில் ஒருவன்
- திமுகவை விட்டு வைகோ வெளியேறியபோது ஒரு திமுக தொண்டன் கூட அணி மாறவில்லை
- திருமங்கலம் இடைத்தேர்தல் வெற்றியை இந்தியாவே உற்று நோக்கியது
- திருமங்கலம் இடைத்தேர்தலில் முதலில் பணி செய்ய விரும்பவில்லை , கலைஞர் வலியுறுத்தியதால் தேர்தல் பணி செய்தேன்
- திருமங்கலம் இடைத்தேர்தல் ஃபார்முலா என்கிறார்கள் , ஆனால் அப்படி ஒரு ஃபார்முலா கிடையாது
- திமுகவில் தொண்டனாக இருக்கவே விரும்பினேன், எப்போதும் பதவியை விரும்பியது இல்லை
- திருமங்கலம் இடைத் தேர்தலில் யார் ஒருவருக்கும் பணம் கொடுக்கவில்லை
- திருச்செந்தூர் தொகுதியிலும் கொடுத்த வாக்குறுதியை போலவே வெற்றி பெற்று காட்டினேன்
- தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவியை வற்புறுத்தி கொடுத்ததால் ஏற்றுக்கொண்டேன்
- மத்திய அமைச்சர் பதவி தேவையில்லை என்று கூறினேன் , கலைஞர்தான் வலுக்கட்டாயமாக கொடுத்தார்
- திருமங்கலம் தேர்தலில் ஜெயிக்காமல் இருந்திருந்தால் அப்போது திமுகவின் ஆட்சி கேள்விக்குறியாகி இருக்கும்
- கருணாநிதியிடம் என்னை பற்றி பொய்களை கூறி கட்சியைவிட்டு நீக்கினர்
திமுகவுக்கு ஒரு சாதாரண தொண்டனாக பணியாற்றினேன்
சதிகாரர்கள், துரோகிகளை எதிர்ப்பதற்கான முதல் படிக்கட்டு இந்தக் கூட்டம்
பதவியை எதிர்பார்த்து என்றுமே திமுகவில் நான் இருந்ததில்லை
திருமங்கலம் இடைத்தேர்தல் சிறப்பாக பணியாற்றி வெற்றி பெற்றோம், உலகமே திருமங்கலம் இடைத்தேர்தலை உற்று நோக்கியது
திருமங்கலம் பார்முலா என்பது எங்களது கடினமான உழைப்பு
கருணாநிதி, அன்பழகனுக்கு தெரியாமல் என்னை திமுகவில் இருந்து நீக்கினர் . நான் எந்த ஒரு பதவிக்கும் நான் ஆசைப்படவில்லை … என்று பேசினார்.
- ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து இன்று அறிவிக்கப்படவில்லை எனில் முக.அழகிரியின் பிறந்த நாளான 30ஆம் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு என தகவல் வெளியாகியிருந்தது.