
காஞ்சிபுரம் மாவட்டம் கீழம்பி புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன்( 25 ),கட்டிட வேலை பார்க்கிறார்.இவர் வீட்டு பக்கத்திலேயே வசித்து வந்தவர் தேவி (21), தேவி பிளஸ் 2 படிக்கும்போதிருந்தே அவரை ஹரி காதலித்தார்.
படித்துவிட்டு, 4 வருட நர்ஸ் கோர்ஸ் படித்துள்ளார் தேவி. ஆரம்பத்தில் காதலிக்காமல் ஒதுங்கி ஒதுங்கியவரை ஹரிதான் விரட்டி மிரட்டி எதை எதையோ பேசி மனசு கரைய வைத்தார். வீட்டிற்கு விஷயம் தெரிந்ததும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இந்நிலையில்தான் பெங்களூரில் டிரெயினிங் சென்றிருக்கிறார் தேவி. ஆனால் ஹரி அங்கேயும் சென்று 7 மாசத்துக்கு முன்பு பெங்களூரில் இருந்த தேவியை கட்டாயப்படுத்தி காஞ்சிபுரம் அழைத்து வந்து கல்யாணம் செய்ய வற்புறுத்தி உள்ளார்.

உன் குடும்பத்தை விட்டுவிட்டு வந்துவிடு, நான் இருக்கிறேன் என்று சத்தியங்களை செய்து கல்யாணத்துக்கு சம்மதிக்க வைத்தார். விவகாரம் பாலுசெட்டி காவல் நிலையம் வரை சென்றுவிட்டது. பிறகு அவர்கள் முன்னிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன் இந்த கல்யாண்ம் நடந்தது.
ஆனால் கல்யாணம் நடந்த அன்றே குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து டார்ச்சர் செய்து அடித்தும் இருக்கிறார். யாரிடமும் பேசக்கூடாது, வெளியே போகக்கூடாது என்று அப்போதே பல விதிமுறையை போட்டுவிட்டார். ஒவ்வொரு நாளும் தேவிக்கு நரகமாக போனது.
தேவி 4 மாத கர்ப்பமக இருந்திருக்கிறார் .இதனையடுத்து நேற்றும் சந்தேகத்தினால் சண்டை வந்துள்ளது. நடுராத்திரி கடப்பாரையை எடுத்து திடீரென தேவியின் மண்டையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் தேவியின் மண்டை பிளந்து மூளை சிதறி விட்டது.
சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவருவதற்குள் தேவி பிணமாக கிடந்தார். உடனடியாக பாலுசெட்டி காவலர்கள் விரைந்து வந்து சடலத்தை பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி வைத்தனர். மேலும் ஹரியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றார்கள்.
அலறி போன அந்தியூர் தேவியின் மரணம் குறித்து அவரது தங்கை சொல்லும்போது, “என் அக்கா ரொம்ப அழகு. ரொம்ப மிருதுவான குணம் உடையவள் பெங்களூரில் 4வது வருஷம் நர்சிங் படிச்சிட்டு இருந்த என் அக்காவை “நீ இல்லை என்றால் செத்து விடுவேன்” என்று மிரட்டி மிரட்டியே பயமுறுத்தி திருமணம் புரிந்து இன்று கடப்பாறையாலேயே அடித்து கொன்றுவிட்டார்.
இந்த கொடூரனுக்கு கடுமையான தண்டனை தர வேண்டும்” என்றார். இந்த சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை தந்துள்ளது.