ஏப்ரல் 21, 2021, 7:29 மணி புதன்கிழமை
More

  மொபைல் டவர் விழுந்து பைக்கில் சென்றவர் உயிரிழப்பு!

  cell tower 1 - 3

  80 அடி உயரமுள்ள மொபைல் டவர் இடிந்து விழுந்ததால் 53 வயதான ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

  திருப்பூரில் வீரபாண்டி அருகிலுள்ள 80அடி உயரமுள்ள மொபைல் டவர் ஒன்று அதிவேகமாக அடித்த காற்றை தாங்க இயலாமல் இடிந்து விழுந்தது.

  அந்த மொபைல் டவர் ஹெல்மெட் அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 53 வயதான செங்கிஸ்கான் மீதும், ஒரு லாரி மீதும் விழுந்துள்ளது.
  செவ்வாய்க்கிழமையன்று காலை 11.30 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த செங்கிஸ்கான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

  லாரிக்கும், லாரி டிரைவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. மொபைல் இடிந்து விழுந்ததால் திருப்பூர் – பல்லடம் சாலையில் 30 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  அதனையடுத்து வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சாலையில் இடிந்து விழுந்த மொபைல் டவரை அகற்றினர்.

  cellpone tower - 4

  அதன் பின்னர் உயிரிழந்தவரின் உடலை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த மொபைல் டவர் சில ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். மொபைல் டவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »