தில்லியில் பிப். 4ல் நடைபெற்ற கலவரத்தில், தன் பங்கு குறித்து, ஆம் ஆத்மி முன்னாள் கவுன்சிலர் தாஹிர் ஹுசேன், போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
வட கிழக்கு டில்லி யின் ஷாஹீன் பாக் பகுதியில்,பிப்.4 அன்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் பெரும் வன்முறையாக மாறியது. இதற்குக் காரணமாக இருந்ததாக, ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் கவுன்சிலர் தாஹிர் ஹுசேன், போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கலவரத்தில் தன் பங்கு குறித்து தாஹிர் அளித்த வாக்கு மூலத்தை போலீஸார் தெரிவித்துள்ளனர். அப்போது தில்லி ஷாஹீன் பாக்கில், ஜவஹர்லால் நேரு பல்கலை முன்னாள் மாணவர் உமர் காலித்தை ஜன.8ல் சந்தித்தேன்.
பின், கலவரம் தொடர்பாக, நண்பர் காலித் சைபியுடன் பேசினேன். அப்போது குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் மக்களைத் துாண்டி விட்டு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரும் போது, அரசுக்கு எதிராக, பெரும் கலவரம் ஏற்படுத்த வேண்டும் என திட்டமிட்டோம்.
எங்கள் திட்டப்படி பிப்.4 அன்று பலரை அழைத்து என் வீட்டில் சேகரித்து வைத்திருந்த கற்கள், பெட்ரோல் குண்டுகள் மற்றும் அமில பாட்டில்களை வீசுவது குறித்து கூறினேன். அன்று மதியம், 1:30 மணி அளவில் நாங்கள் கற்களை வீசத் தொடங்கினோம். என்று தாஹிர் உசேன் கூறியுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக பிப்ரவரி மாதத்தில் நடந்த வடகிழக்கு தில்லி கலவரத்தில் தாஹிர் உசேன் தனது பங்களிப்பை ஒப்புக் கொண்டதாக தில்லி காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.டி.எஃப்) ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) தெரிவித்துள்ளது. .
விசாரணையின் போது இப்போது இடைநீக்கம் செய்யப்பட்ட ஆம் ஆத்மி கவுன்சிலர் தனது அரசியல் அதிகாரத்தையும் பணத்தையும் பயன்படுத்தி இந்துக்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க விரும்புவதாக வெளிப்படையாகக் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். அவர் தாமே வடகிழக்கு தில்லி கலவரத்தின் சூத்திரதாரி என்று கூறியுள்ளார்.
காவல்துறை அதிகாரிகளின் தகவல் படி, தாஹிர் காலித் சைஃபி, முன்னாள் ஜே.என்.யூ மாணவர் உமர் காலித், இஷ்ரத் ஜஹான் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ) உறுப்பினர் டேனிஷ் ஆகியோரின் ஆதரவைப் பயன்படுத்தினார். ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370 வது பிரிவை ரத்து செய்த பின்னர், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றும் மத்திய அரசின் நடவடிக்கை ஆகியவற்றால் தான் வேதனை அடைந்ததாக தாஹிர் போலீசாரிடம் கூறினார்! எனவே ஒரு தீவிர நடவடிக்கை எடுக்க தாம் முடிவு செய்ததாகவும் கூறியுள்ளார்.
2020 ஜனவரி 8 ஆம் தேதி, முன்னாள் ஜே.என்.யூ மாணவர் உமர் காலித் உடனான சந்திப்பை தில்லியின் ஷாஹீன் பாகில் உள்ள பி.எஃப்.ஐ அலுவலகத்தில் காலித் சைஃபி வாஸதி செய்ததாக அவர் கூறியுள்ளார். கூட்டத்தின் போது, தனது சமூகத்திற்காக தனது உயிரை தியாகம் செய்யத் தயாராக இருப்பதாக காலித் அவரிடம் கூறியதாகக் தெரிகிறது. அதே சமயம், ‘இந்துக்களுக்கு எதிரான போரில்’ தேவையான அனைத்து நிதி உதவிகளையும் பி.எஃப்.ஐ – பாப்புலர் பிரண்ட் ஆஃப் இண்டியா அமைப்பின் உறுப்பினர் டேனிஷ் வழங்குவார் என்று காலித் சைஃபி தாஹிரிடம் கூறியுள்ளார்.
CAA இன் முடிவை திரும்பப் பெற மத்திய அரசைக் கட்டாயப்படுத்தும் பொருட்டு இந்த மூவரும் தேசிய தலைநகரில் ஒரு பெரிய செய்லைச் செய்ய சதி செய்தனர்.
தாஹிரைப் பொறுத்தவரை, காலித் சைஃபி மக்களை வீதிகளில் இறக்கி, இந்து சமூகத்திற்கு எதிராக மிகப் பெரிய அளவில் வன்முறையை கட்டவிழ்த்துவிடும் நிலைக்குத் தூண்டுவதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
சைஃபி, தனது நண்பர் இஷ்ரத் ஜஹானுடன் சேர்ந்து, குரேஜியில் ஷாஹீன் பாக் வழியே CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். இது படிப்படியாக தில்லியின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது.
கலவரத்திற்கான திட்டமிடல் குறித்து விவாதிக்க பிப்ரவரி 4 ஆம் தேதி, அபு ஃபசல் என்க்ளேவில் மீண்டும் சைஃபியை சந்தித்ததாக தாஹிர் தெரிவித்தார்.
அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு வரும்போது இந்த கலவரத் திட்டம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சைஃபி தெரிவித்ததாக அவர் கூறினார்.
குப்பையில் இருந்து காலியான மது பாட்டில்கள் மற்றும் குளிர் பானங்கள், கட்டுமான இடங்களிலிருந்து கற்கள் மற்றும் எரிபொருள் ஆகியவற்றை சேகரிக்கத் தொடங்கியதாகவும், அதை சந்த் பாக் நகரில் உள்ள தனது வீட்டின் மாடியில் சேகரித்து வைத்ததாகவும் தாஹிர் தெரிவித்தார்.
கலவரத்தின் போது பெட்ரோல் குண்டுகளாகப் பயன்படுத்தப்பட்ட காலியான பாட்டில்களில் பெட்ரோலை நிரப்புவதற்கு நான்கு கார்களிலும் எரிபொருள் நிரப்பியதாக அவர் கூறினார்.
உமர் காலித்தின் ஆலோசனையின் பேரில், தனது வீட்டின் மாடியில் அதிக அளவு அமிலம், செங்கல், கற்கள், பெட்ரோல், டீசல் போன்றவற்றை சேமித்து வைத்தார். கலவரத்தின்போது பயன்படுத்த காவல்துறையினரிடம் ஒப்படைக்கப் பட்டிருந்த தனது உரிமம் பெற்ற துப்பாக்கியையும் சேகரித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
வன்முறையின் போது தனது சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதாக தாஹிர் கூறினார்; எனவே சம்பவத்திற்கு ஒரு நாள் முன்பு, அவர் தனது மனைவி, குழந்தைகள் மற்றும் அவரது குடும்பத்தின் பெரியவர்களை வேறு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றினார்.
காவல்துறையிடம் எந்த ஆதாரமும் கிடைக்காத வகையில் அனைத்து சி.சி.டி.வி கேமராக்களையும் வெளியே இழுக்கப்பட்டு சேதப் படுத்தப் படுவதையும் அவர் உறுதி செய்தார். கலவரம் நடந்த நாளில், அவர் தனது பங்கு குறித்து எந்தவிதமான சந்தேகத்தையும் தவிர்க்க வேண்டும் என்றே தில்லி போலீஸை அழைத்தார்.
ஆகஸ்ட் 1ஆம் தேதி, வடகிழக்கு தில்லி கலவரத்திற்கு முன்னர் உமர் காலித் ஆற்றிய உரைகள் குறித்தும், வகுப்புவாத வன்முறைக்கு முன்னதாக ஷாஹீன் பாகில் தாஹிர் மற்றும் சைபியுடனான சந்திப்புகள் குறித்தும் தில்லி காவல்துறை அவரிடம் கேள்வி எழுப்பியது. அதற்கு அவர் இவ்வாறான சில பதில்களை அளித்துள்ளார்.