spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉலகம்கொரோனா: ஒன்றுக்கொன்று பெரிய வித்தியாசமோ அல்லது பெரிய மாற்றங்களோ இல்லை! ஆய்வின் தகவல்!

கொரோனா: ஒன்றுக்கொன்று பெரிய வித்தியாசமோ அல்லது பெரிய மாற்றங்களோ இல்லை! ஆய்வின் தகவல்!

- Advertisement -
corona-1

கொரோனா வைரஸ் வகையில் அதிக மாற்றங்கள் இல்லை என புதிய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது…!

தீவிரமாக பரவிவரும் COVID-19 தொற்று நோயைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு தடுப்பூசியை உருவாக்கும் போட்டியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக செயல்பாடு வருகிறது.

கொரோனா பரவுவதை தடுக்க பல்வேறு நாடுகளில் சமூக இடைவெளி மற்றும் முழு ஊரடங்கு அமல் படுத்தபட்டுள்ளது. இதற்கிடையில், கொரோனா தொற்றுக்கு “பயனுள்ள தடுப்பூசிகள்” கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்த போதிலும்”, முழுமையான தீர்வை தரும் வெற்றிகரமான மருந்து இப்போதைக்கு கிடைக்க வாய்ப்பே இல்லை என்று உலக சுகாதார அமைப்பு (WHO) நேற்று பகீர் தகவலை வெளியிட்டது.

இந்நிலையில், மக்களுக்கு தடுப்பூசி குறித்து நம்பிக்கையூட்டும் வகையில், கொரோனா வைரஸ் வகையில் அதிக மாற்றங்கள் இல்லை என புதிய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

COVID-19 அல்லது SARS-CoV-2 தொற்றுக்கு எதிரான தடுப்பூசி தயாரிப்பில் மிகப்பெரிய சவால் அளிப்பது வைரஸ் இரட்டிப்பாகும் போது வெவ்வேறு விதமாக கொரோனா வைரஸ் மாற்றமடைகிறது என்பதே, ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஆய்வில் கொரோனா வைரஸ் வகைகளில் ஒன்றுக்கொன்று பெரிய வித்தியாசமோ அல்லது பெரிய மாற்றங்களோ இல்லை என்று ஆய்வில் நல்ல செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

இது குறித்து ஃபிரான்டியர்ஸ் இன் மைக்ரோபயாலஜி (Frontiers in Microbiology) இதழில் வெளியிடப்பட்ட தகவலின் படி, SARS-CoV-2 வரிசைமுறைகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வு 48,635 கொரோனா வைரஸ் மரபணுக்களின் பகுப்பாய்விலிருந்து பெறப்பட்டது.

இத்தாலி போலோக்னா பல்கலைக் கழக (University of Bologna in Italy) ஆய்வாளர்கள் உலகம் முழுதும் பரவிய கரோனா வைரஸ் மரபணு வரிசைத்தொடர்களை ஆய்வுக்குட்படுத்திய போது இந்த செய்தி தெரியவந்துள்ளது. ஆராய்ச்சியாளர்கள் அனைத்து கண்டங்களையும், வைரஸ் பிறழ்வுகளை வரைபடமாக்கினர்.

ஒரு மாதிரிக்கு ஏறக்குறைய ஏழு பிறழ்வுகள் மாற்றங்கள் கொரோனா வைரஸில் நிகழ்ந்தாலும் ஒன்றுக்கொன்று பெரிய வேறுபாடுகள் தெரியவில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பொதுவான காய்ச்சல் மாறுபடும் வீதத்தைக் கொண்டுள்ளது, இது இரு மடங்கிற்கும் அதிகமாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

“SARS-CoV-2 கொரோனா வைரஸ் ஏற்கனவே மனிதர்களைப் பாதிக்கக்கூடியதாக மாறியுள்ளது, இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்தது என்னவெனில் கொரோனா வைரஸ் மிகவும் குறைவான பரிணாம மாற்றங்கள் கொண்டது என்பதே” என்று போலோக்னா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரும் ஆய்வின் ஒருங்கிணைப்பாளருமான ஃபெடரிகோ ஜியோர்கி கூறினார்.

கொரோனாவுக்கு எதிராக நாம் வழங்கி வரும் சிகிச்சைகள், வளர்ந்து வரும் புதிய சிகிச்சைகள், நோய் தடுப்பு மருந்துகள் ஆகியவை நிச்சயம் திறம்பட வேலை செய்யும்” என்று இந்த ஆய்வு திட்டவட்டமாக நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, நாவல் கொரோனா வைரஸின் 6 வகையான மாறுமைகள் இருக்கின்றன. இதில் அசலானது வூஹானில் டிசம்பர் 2019-யில் உருவான ‘L’ என்ற கொரோனா மாதிரி.

இதன் உருமாற்றமான ‘L’ வைரஸ் மாதிரி 2020 தொடக்கத்தில் தோன்றியது. ஜனவரி மத்தியிலிருந்து ‘V’, ‘G’ ஆகிய வடிவங்களாக கொரோனா மாறியுள்ளதாக தெரியவந்துள்ளது. தற்போது, ‘G’ என்ற கொரோனா மாதிரி தான் பரவலாக தொற்றி வருகிறது. இது தான் GR மற்றும் GH என்ற துணைவகைகளாக மாற்றமடைந்துள்ளது.

G-யின் மாறிய வகையினமானGR, GH ஆகிய கொரோனா துணை வகை வைரஸ் தான் இதுவரை பரவலாகியுள்ளது, அதாவஹ்டு இந்த ஆய்வில் ஆய்வு செய்யப்பட்ட கொரோனா வைரஸ் மரபணு வரிசைத் தொடர்களில் 74% G-வகை, துணை வகைகள் தான். இவை 4 உருமாற்றங்களை தெரிவிக்கின்றன்,

இதில் 2 வகைகள் RNA பாலிமெரேஸ் புரோட்டீன் வரிசைத் தொடரையும் வைரஸின் ஸ்பைக் புரோட்டீனையும் மாற்றக்கூடியது. இந்தத் தன்மை தான் வைரஸ் பரவலை தூண்டி விடுகிறது.

6 முக்கிய கொரோனா துணை வகைகள் போக ஆய்வாளர்கள் சில அடிக்கடி நிகழாத வேறு சில வைரஸ் உருமாற்றங்களையும் அடையாளப்படுத்தியுள்ளனர். ஆனால் இதைப்பற்றி இப்போதைக்குக் கவலைப்பட தேவையில்லை என்றாலும் கண்காணிப்பு தேவை என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe