ஊரடங்கு காரணமாக கருத்தடை சாதனங்கள் மற்றும் மருந்துகள் தடைப்பட்டுள்ளதால் உலகம் முழுவதும் 70 லட்சம் பெண்கள் கர்ப்பம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது என்று ஐநா மக்கள் நிதியம் மற்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் 4.7 கோடி பெண்கள் நவீன கருத்தடை சாதனங்களை உபயோகப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும், அதனால் வரும் மாதங்களில் தேவையில்லாமல் பல லட்சம் பெண்கள் கர்ப்பம் தரிக்கும் சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பெண்கள் சிரமத்திற்கு உள்ளாக நேரிடும் எனவும் ஐநா மக்கள் நிதியம் மற்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் வரும் காலத்தில் மிக அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் பத்து லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் தங்களது குடும்பத்தை நடத்துவதற்கான திறன், ஆரோக்கியத்தை இழக்க நேரிடும் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது