கேள்வி எழுப்பியது நீதிமன்றம்! சட்டமாக்கினார் யோகி! இனி… பொதுச் சொத்தை சேதப்படுத்தினால்… அபராதம்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
Yogi Adityanath studying in hospital in Uttar Pradesh - 2026

யோகி ஆதித்யநாத் என்ற சிங்கம்! பொதுச் சொத்தை நாசமாக்கினால்… கலவரக்காரர்களிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம் என்ற சட்டத்தை உத்தரப் பிரதேச அமைச்சரவை நிறைவேற்றியுள்ளது.

உத்தர பிரதேச அரசு பொதுச் சொத்தை சேதப்படுத்தியதற்கான பணத்தை திரும்பப் பெற “Recovery of Damage to Public Properties Ordinance-2020.” என்னும் சட்டத்தை இயற்றியுள்ளது. இப்போது இது தொடர்பாக யாருக்கெல்லாம் வழக்கு போட வேண்டுமோ போட்டுக் கொள்ளலாம்.

நேற்று உச்ச நீதிமன்றம், உத்தர பிரதேச அரசிடம் கலவரத்தில் சேதமான சொத்துக்களை கலவரக்காரர்களிடமிருந்து திரும்பப் பெற வேண்டுமென்றால் அதற்கு பக்க பலமாக சட்டம் இயற்றப்பட வேண்டும். அப்போதுதான் அது சட்டப்படி செல்லும் என்றும், அப்படி இல்லாவிட்டால் அது சட்டத்திற்குப் புறம்பானதாகக் கருதப்படும் என்றும் கூறியது.

அதே நாளில், யோகி ஆதித்யநாத், இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளார். இனிமேல் எந்த நீதிமன்றத்தாலும் கலவரக்காரர்களிடமிருந்து கலவரத்திற்கான பணத்தை திரும்பப் பெற உத்தர பிரதேச அரசாங்கத்தை தடை செய்ய முடியாது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.