தொழிலதிபரை மணந்த நடிகை ஷீலா!

Published:

sheela marriage - 2026

தென்னிந்திய ரசிகர்களின் நெஞ்சங்களில் தனியிடம் பிடித்த மலையாள நடிகை ஷீலா தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.

பூவே உனக்காக, கோல்மால், மாயா, நந்தா உள்பட, பல்வேறு படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஷீலா! அதன் பின்னரும் இளவட்டம், வீராசாமி, சீனா தானா, கண்ணா, வேதா உள்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். தெலுங்கில் ராஜு பாய், பருகு உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். கடைசியாக ஹெபர் என்ற கன்னடப் படத்தில் நடித்தார்.

கடந்த 2 வருடங்களாக சினிமாவில் எதிலும் நடிக்காமல் இருந்தார். வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் முயற்சித்து வந்ததாகத் தெரிகிறது. இதனிடையே, திருமணத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்படவே, தற்போது, தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபர் சந்தோஷ் ரெட்டிக்கும் ஷீலாவுக்கும் திருமணம் சென்னையில் எளிமையான முறையில் நடந்தது. நெருங்கிய உறவினர்கள் மட்டும் திருமணத்தில் கலந்து கொண்டனர். தனது திருமண போட்டோக்களை டிவிட்ரில் வெளியிட்டுள்ளார் ஷீலா!

இது குறித்து கருத்து தெரிவித்த போது, “எனக்கு இந்த நாள் சிறப்பான நாள். எதனுடனும் ஒப்பிட முடியாத மகிழ்ச்சியை என் இதயம் உணர்கிறது. புதிய நாளில் புதிய வாழ்க்கையை தொடங்கியிருக்கிறேன்” என்று படத்தைப் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருக்கிறார்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

Related articles

Recent articles

spot_img