madurai tanishq jewel shop rubbery - 2026

மதுரை நகைக்கடை கொள்ளைச் சம்பவம்; மாட்டிய யூட்யூபர், இன்ஸ்டா பிரபலங்கள்!

மதுரை கிரைம் நியூஸ் சற்றுமுன்
madurai tanishq jewel shop rubbery - 2026

மதுரையில் உள்ள தனிஷ்க் (Tanishq) நகைக்கடையில் கொள்ளைச் சம்பவம் 2026 நவம்பர் 11-ஆம் தேதி நள்ளிரவு (நவம்பர் 12 அதிகாலை) நடைபெற்றுள்ளது. கடை பூட்டப்பட்ட பிறகு, நவம்பர் 12-ஆம் தேதி அதிகாலை சுமார் 3 மணி அளவில் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. மறுநாள் (நவம்பர் 12) காலை ஊழியர்கள் கடையைத் திறந்தபோதுதான் நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது.

மதுரை காளவாசல் பைபாஸ் சாலையில் புதிதாகத் திறக்கப்பட்ட தனிஷ்க் நகைக்கடையில், நிஷாந்த் என்பவர் துணிகரமாகப் புகுந்து சுமார் 15 கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்தார் என்று தெரியவந்தது.

இந்த நகைக்கடை சில தினங்களுக்கு முன்னர் தான் திறப்பு விழா கண்டுள்ளது. தினமும் விதவிதமான மேக்கப் போட்டு, மாறு வேடத்தில் இந்த நகைக்கடைக்குச் சென்று வந்துள்ளார் நிஷாந்த். பின் நவ.12 அதிகாலை கட்டடத்தின் பின் வாசல் வழியாகச் சென்று, ஷோகேஸில் வைத்திருந்த நகைகளை அள்ளிப் போட்டுக் கொண்டு, டூவீலரில் அங்கிருந்து தப்பி வந்துள்ளார்.

ALSO READ:  நவீன வேளாண் முறைகள், அரசு திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்பு உணர்வு!

நகைகள் திருடப்பட்ட தகவல் அறிந்து, மறு நாள் போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், அந்த நேரத்தில் டூவீலரில் சென்ற நபர் குறித்தும், அவர் எங்கெல்லாம் சென்றார் என்பதை அனைத்து சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தும் கண்டறிந்தனர். வாகனத்தில் சென்ற நிஷாந்த் பின்னர் ஆட்டோவில் சென்று தனது தோட்டத்தில் குழி தோண்டி நகைகளைப் புதைத்து விட்டு, தான் அணிந்திருந்த துணிகளை தீயிட்டுக் கொளுத்தியதாகவும் தெரிகிறது.

இதை அடுத்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், நகைக்கடையில் நடைபெற்ற 15 கிலோ தங்க நகைக் கொள்ளை வழக்கில், இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சி உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்து, திருடப்பட்ட அனைத்து நகைகளையும் மீட்டுள்ளனர்.

மேலும், இந்தக் குற்றத்தை நிஷாந்த் என்ற குற்றவாளி செய்துள்ளார் என்று போலீஸார் கண்டறிந்தனர். மெலும், இந்த வழக்கில் தொடர்புடைய மீனாட்சி, ஒரு இன்ஸ்டாகிராம் பிரபலமாகவும், டெக் பாஸ் (Tech Boss) என்ற யூடியூப் சேனலில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வந்தவர். இவர் தவெக அனுதாபி என்றும் கூறுகிறார்கள்.

ALSO READ:  புட்டுத் திருவிழாவுக்குப் புறப்பட்டார் பரங்குன்றம் சுப்பிரமணியர்!

கொள்ளையடித்த நகைகளில் ஒரு பகுதியை நிஷாந்த் தனது தோழியான இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் பிரபலம் மீனாட்சி மற்றும் தனது தந்தை சுரேஷ் ஆகியோரிடம் கொடுத்து வைத்திருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மீனாட்சியையும் சுரேஷையும் கைது செய்தனர்.

கைதானவர்களிடம் இருந்து முதற்கட்டமாக 5 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து, மீனாட்சியை மதுரை அடுத்த மாடக்குளம் கண்மாய் மற்றும் மலையடிவாரப் பகுதிக்கு அழைத்துச் சென்ற போலீசார், அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த எஞ்சிய 10 கிலோ நகைகளையும் தோண்டி எடுத்தனர்.

கொள்ளையடிக்கப்பட்ட 15 கிலோ தங்க நகைகளும் முழுமையாக மீட்கப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள முக்கியக் குற்றவாளி நிஷாந்தைப் பிடிக்கத் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Posts by Dhinasari Reporter:

ALSO READ:  இந்தியாவுக்கு எதிரான சக்திகளுக்கு அமெரிக்க நிதி: பாடகி மேரி மில்பென்!