
மதுரை: சில தினங்களுக்கு முன் மாணவர் ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் பாதிப்பு கண்டறியப்பட்டது.
மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவருக்கு சில தினங்களுக்கு முன் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து மாணவர் விடுதியில் தங்கியிருந்த 77 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் 76 பேருக்கு நெகட்டிவ் என முடிவுகள் வந்தன. தற்போது மேலும் ஒரு மாணவருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இரண்டு மாணவர்களும் சிகிச்சைக்காக தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்.