spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்மதுரை ஆதீனம் மூச்சுத் திணறலால் அப்பலோவில் அனுமதி: உடல்நிலை கவலைக்கிடம்!

மதுரை ஆதீனம் மூச்சுத் திணறலால் அப்பலோவில் அனுமதி: உடல்நிலை கவலைக்கிடம்!

- Advertisement -
madurai atheenam
madurai atheenam

மதுரை : மதுரை ஆதீனகர்த்தர் மூச்சுத் திணறலால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் (77) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுரை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது.

அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும், இன்று அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. டாக்டர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தமிழகத்தின் மிகத் தொன்மையான சைவ சமயத் திருமடங்களில் ஒன்றான மதுரை ஆதீனத்தின் தலைவர் ஆதீனம் பீடாதிபதி என அழைக்கப்படுகிறார். மதுரையில் அமைந்துள்ள இந்த ஆதீனம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது.

மதுரை ஆதினத்திற்கு இன்று வரை 292 பேர் பீடாதிபதியாக இருந்துள்ளனர். 292வது பீடாதிபதியாக அருணகிரிநாதர் பொறுப்பில் உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Follow us on Social Media

19,163FansLike
386FollowersFollow
91FollowersFollow
0FollowersFollow
4,901FollowersFollow
17,200SubscribersSubscribe