வஉசி துறைமுகத்தை பார்வையிட இலவச அனுமதி

உள்ளூர் செய்திகள் நெல்லை

வஉ சிதம்பரனார் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 5 ம் தேதி துாத்துக்குடி வஉசி துறைமுகத்தை பார்வையிட இலவசமாக அனுமதி வழங்கப்படுகிறது.

இது குறித்து வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித் துள்ளதாவது, விடுதலை போராட்ட வீரர், செக் கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 146வது பிறந்த நாளை முன்னிட்டு வரும் 05.09.2017 அன்று ஒரு நாள் மட்டும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொது மக்கள் துறைமுகத்தை பார்வையிடுவதற்கு இலவசமாக அனுமதி வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.