அப்பா உடற்பயிற்சி செய்கிறார்: எஸ்பிபி சரண்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் சினி நியூஸ் லைஃப் ஸ்டைல்
spb-charan
spb-charan

கொரோனா வைரசோடு போராடுகின்ற பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நலம் தேறி வருகிறார். எஸ்பிபி யின் உடல் நலம் மேலும் சீரடைந்து வருவதாக அவருடைய மகன் எஸ்பி சரண் தெரிவித்தார்.

எஸ்பிபி யின் நுரையீரல் தற்போது நல்ல முறையில் இயங்குகிறது, சீரடைந்து வருகிறது என எக்ஸ்ரேயில் தெரிகிறது என்றார். 20 நிமிடங்கள் அமர்ந்து உடற்பயிற்சி செய்கிறார் என்று கூறினார். பிசியோதெரபிஸ்ட்டுகள் எஸ்பிபியை உடற்பயிற்சி செய்விக்கிறார்கள் என்று சரண் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஆகஸ்ட் 5ம் தேதி எஸ்பி பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். ஒரு கட்டத்தில் அவருடைய உடல் நிலை மிகவும் கவலைக்கிடமானது. இதனால் மருத்துவர்கள் வென்டிலேட்டர் மற்றும் எக்மோசா கருவிகள் உதவியோடு எஸ்பிபி.,க்கு சிகிச்சை அளித்தார்கள்.

இதை அடுத்து, முக்கியப் பிரமுகர்கள், ரசிகர்கள், நலம் விரும்பிகள் எஸ்பிபி விரைவில் குணமாக வேண்டும் என்று பிரார்த்தித்தார்கள். அண்மையில் அவருக்கு கொரோனா நெகடிவ் என்று வந்ததால் அனைவரும் மகிழ்ச்சி தெரிவித்தார்கள்.

பாலு விரைவில் நலமடைந்து வீட்டுக்கு திரும்ப வர வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோ இதோ!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.