
ஓசூரிலிருந்து கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்த இரண்டு சிறுமிகளை நல்ல முறையில் பெற்றோரிடம் ஒப்படைத்த கரூர் மாவட்ட காவல்துறை உதவி ஆய்வாளர் பாராட்டுப் பெற்றுள்ளார்.
பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு ஓசூரில் இருந்து 15 வயது மற்றும் 13 வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுமிகள் ஆக்டிவா இரண்டு சக்கர வாகனம் மூலம் ஓசூரில் இருந்து கரூர் வந்துள்ளனர். மீண்டும் ஓசூருக்கு செல்ல வழி தெரியாமல் தவித்த அச்சிறுமிகள் காவல் நிலையத்திற்கு வந்து உதவி கேட்டனர்.

அப்போது உதவி ஆய்வாளர் சத்யபிரியா அச்சிறுமிகளை விசாரித்து, அவர்களது பெற்றோர்களுக்கம், ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்ததுடன், இரவு 10 மணிக்கு மேல் ஆகிவிட்டது என்ற நிலையில், அச்சிறுமிகளின் பாதுகாப்பு கருதி கருர் அன்புக்கரங்கள் அறக்கட்டளை இல்லத்தில் தங்க வைத்தார்.
பின்னர், நேற்று காலை 5.15 மணி அளவில் ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலைய முதல் நிலை பெண் காவலர் பூங்கோதை மற்றும் காவலர் அறிவுமணி ஆகியோர் முன்னிலையில் சிறுமிகளின் பெற்றோரை அழைத்து, அவர்களை நல்லமுறையில் ஒப்படைத்தனர்.
செய்தி: மோகன் கணேஷ்



