அந்தரத்தில் பறந்த இளைஞர்.. பகீர் வீடியோ!

அடடே... அப்படியா? உலகம் சற்றுமுன்

இலங்கையில் இளைஞர் ஒருவர் காத்தாடியுடன் மேலே பறந்து செல்லும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது

அந்த வீடியோவில், காத்தாடியின் நூலின் தொங்கியவாறு இளைஞர் பறந்து செல்கிறார். ஆனால், காத்தாடி இருப்பதுபோல தெரியவில்லை. இளைஞர் அந்தரத்தில் பறக்கும்போது, அவரின் நண்பர்கள் பதற்றத்துடன், முதலில் கையை விடு என்று கத்துகிறார்கள். அதன்பிறகு, நூலின் மீது காலை போடு என்று கூறும்போது, அவர் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கும்போது, கையை விடு என்று கூறியதும், இளைஞர் கீழே குதிக்கிறார்.

இதில், இளைஞருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ காட்சிகள் உண்மையா என்று தெரியவில்லை. ஆனால், சிலர் இதை உண்மை என்றே கூறுகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.