சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா குறித்து மத்திய அரசு உத்தரவு செல்லாது!

இந்தியா சற்றுமுன்
aloke varma vs rakesh asthana - 2026

சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவின் பொறுப்புகளை பறித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று வழக்கம் போல், அலோக் வர்மா தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு கூறியது.

அக்டோபர் 14-ல் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தவிட்டது உச்ச நீதிமன்றம்.

சி.பி.ஐ. இயக்குநா் அலோக் வர்மாவும் ராகேஷ் அஸ்தானாவும் ஒருவா் மீது ஒருவா் குற்றம்சாட்டி வந்தனா்

லஞ்சப் புகார்களைத் தொடா்ந்து இவா்கள் இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பி மத்திய அரசு உத்தரவிட்டது. இதை அடுத்து அலோக் வர்மா, தனது பணி நீக்கம் செல்லாது என அறிவிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

சி.பி.ஐ. இயக்குநா் அலோக் வர்மா மீதான மத்திய அரசின் நடவடிக்கையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் அவரை மீண்டும் சி.பி.ஐ. இயக்குநராக பணியாற்றலாம் என்று உத்தரவிட்டுள்ளது.

அலோக் வர்மா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.