’ரா’வை பலவீனப் படுத்த வெளிநாட்டு ஏஜெண்ட்களுக்கு துணை நின்ற அலோக் வர்மா?! சிக்கிய சிபிஐ முன்னாள் இயக்குனர்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

aloke varma vs rakesh asthana - 2026

அலோக் வர்மாவுக்கு ஆப்பு உறுதி என்கிறார்கள் அதிகார மட்டத்தில்! சிபிஐ இயக்குனராக இருந்த அலாக் வர்மா மத்திய அரசு தன்னை பணியில் இருந்து விடுவித்து அனுப்பியதை ரத்து செய்ய உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின்
மூலமாக அவரே போய் படுகுழியில் விழுந்து விட்டார் என்றே கூற வேண்டும்.

உச்சநீதிமன்ற உத்தரவு படி அலாக் வர்மா மீது உள்ள குற்ற சாட்டை விசாரித்த மத்திய விஜிலெ ன்ஸ் கமிசன் குற்றத்திற்கு முகாந்திரம் உள்ளது என்றும் உச்சநீதிமன்ற த்தில் தெரிவித்து உள்ளது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க அலோக் வர்மாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு இட்டிருந்தது.

அலோக் வர்மாவும் இதற்கு அதற்கு விளக்கம் அளித்து உச்சநீதிமன்ற த்தில் அறிக்கை அளித்து இருந்தார். இந்த அறிக்கை யும் மத்திய விஜிலெ ன்ஸ் கமிசன் அலோக் வர்மாவுக்கு அளித்த  ரிப்போர்ட் டும் தி வயர் என்கிற இணைய தள  ஊடகத்தில் வெளியாகி விட்டது.

சீலிடப்பட்ட கவரில் அலோக் வர்மாவுக்கு சிவிசி அளித்த ரிப்போர்ட் டும் பதிலுக்கு அலோக் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் அளித்த சீலிடப்பட்ட அறிக்கையும் தி வயர் பத்திரிக்கை யில் வந்தது எப்படி? அவர்களுக்கு இந்த அறிக்கை களை அளித்தது யார்? நிச்சயமாக மத்திய விஜில்லென்ஸ் கமிசன் அளித்து இருக்காது.

ஆனால் மத்திய அரசுடன் அரசியல் நோக்கத்துடன் மோதல் போக்கை கடை பிடித்து வரும் அலோக் வர்மா தான் அளித்து இருக்க முடியும்.இதனால் இப்பொழுது அலாக் வர்மா மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் செம கோபத்தில் இருக்கிறார்.

வழக்கு வருகிற 29 ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.அலோக் வர்மாவை மோடி வீட்டுக்கு அனுப்ப முக்கியகாரணம் என்ன தெரியுமா? மொயின் குரேசி வழக்கில் சதீஸ்பாபு சனா என்பவர் சிபிஐ ஸ்பெஷல் டைரக்டர் ராகேஸ் அஸ்தானாவுக்கு 2 கோடிலஞ்சம் கொடுத்தார் என்றும் இதற்கு துணையாக இருந்தார் என்று ரா அதிகாரி சமந்த் குமார் கோயல் என்பவர் மீதும் அலோக் வர்மா எப்ஐஆர் பதிவு செய்து இருந்தார்.

இந்த சமந்த் குமார் கோயல் ரா அமைப்பில் 2 வது இடத்தில் உள்ள அதிகாரி. அவருடைய ஸ்டேசன் துபாய்.அங்கு ரா மேற்கொண்டு வரும் நடவடிக்கை களுக்கு சில ரகசிய செயல் பாடு கள் மேற்கொள்ள ப்பட்டதாகவும் ஆனால் அலோக் வர்மா தேவையில்லாமல் இதில் தலையிட்டு குட்டையை கிளப்பி விட்டார் என்று ரா அமைப்பின் தலைவர் அனில் தஸ்மானா பிரதமரிடமும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் அஜித் தோவலிடமும. அலோக் வர்மா மீது குற்றம் சுமத்தியதால்தான் அலோக் வர்மா வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

ஆக இது அலோக் வர்மா VS. ராகேஸ் அஸ்தானா சம்பந்தப் பட்ட ஊழல் பிரச்சினை மட்டுமல்ல அதையும் தாண்டி ரா அமைப்பை பலவீனபடுத்த நினைக்கும் வெளிநாட்டு சக்திகளுக்கு அலோக் வர்மா துணை நின்றார் என்று மத்திய அரசு இந்த பிரச்சினை யை கொண்டு செல்கிறது. எனவே அலோக் வர்மா தப்பிக்கவே முடியாது.!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.