விஜயகாந்துக்கு வரும் 17ஆம் தேதி கிட்னி ஆபரேஷன்!

சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
vijayakanth chritmas2 - 2026

தேமுதிக., தலைவர் விஜயகாந்துக்கு வரும் 17ஆம் தேதி ‘கிட்னி’ அறுவை சிகிச்சை நடக்கவுள்ளதாகக் கூறப் படுகிறது.

விஜயகாந்த் தற்போது அமெரிக்காவில் சிகிச்சையில் உள்ளார். சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு முதலில் சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது. பின்னர், அமெரிக்கா மருத்துவனையில் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தார்.

தற்போது, அமெரிக்காவில் சிகிச்சையை மேற்கொண்டிருக்கிறார். அவருக்கு ‘கிட்னி’ மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதை அடுத்து, கிட்னி தானம் செய்ய முன்வந்தவரும் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப் பட்டிருக்கிறார். இன்னும் ஒரு வாரத்துக்குள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டதாம்.

தைப் பொங்கல் பண்டிகை நாட்களை அடுத்து, வரும் 17ஆம் தேதி அவருக்கு கிட்னி ஆபரேஷன் செய்ய உத்தேசிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், அவரை தயார் படுத்தும் விதமாக அமெரிக்காவின் பல்வேறு சுற்றுலா தலங்களிலும் விஜயகாந்தை அழைத்துச் சென்று பிரேமலதா உள்ளிட்டோர் சுற்றிப் பார்த்து வருகின்றனர். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இவற்றை தேமுதிக தொண்டர்கள் பார்த்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.