தமிழக அரசின் கடனை அடைக்க சவுதியில் இருந்து தனது பங்காக ரூ.90558 அனுப்பிய தமிழர்..

Published:

தமிழக அரசு வாங்கிய கடனை அடைக்க, சவுதி அரேபியாவில் வசிக்கும் பொறியாளர் தன் பங்காக, 90 ஆயிரத்து 558 ரூபாயை, முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா கொப்பம்பட்டி கிழக்கு காலனியை சேர்ந்தவர் சின்னராஜா செல்லதுரை. இவர் 90 ஆயிரத்து 558 ரூபாயை, முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பி உள்ளார்.

அத்துடன், முதல்வர் தனிப்பிரிவுக்கு அவர் அனுப்பி உள்ள கடிதம்: நான் சவுதி அரேபியாவில் பொறியாளராக பணிபுரிகிறேன். பொருளாதாரம் படிக்கிறேன். தமிழகத்தின் 2022 – 23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை செய்தி வழியே பார்த்தேன். அதில், 2023 மார்ச் 31 நிலவரப்படி, தமிழக அரசின் கடன் 6.53 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 7.21 கோடி.அடுத்த ஆண்டு மார்ச் நிலவரப்படி, ஒவ்வொரு தமிழனின் மீதும் உள்ள தமிழக அரசின் கடன், 90 ஆயிரத்து 558 ரூபாய். இதை அறிந்து வருத்தம் அடைந்தேன். கடன் தீர என் பங்களிப்பை செலுத்த முடிவு செய்தேன்.

அதற்காக கடந்த ஆறு மாதத்தில், 90 ஆயிரத்து 558 ரூபாய் சேமித்து, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி உள்ளேன். தமிழக அரசின் கடனை செலுத்த என் பங்களிப்பை பயன்படுத்தவும். தமிழகம் ஒரு குடும்பம். இக்குடும்பத்தில் பிறந்ததில், நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.இவ்வாறு கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!
1500x900 865482 man 1 1 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img