மீனவரின் கோரிக்கையை செவிமடுத்த பொன்.ராதாகிருஷ்ணன்

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

ponnar kanyakumari1 - 2026மீனவர்களின் கோரிக்கையை உடனே செவிமடுத்தார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

வரும் மக்களவைத் தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் இருந்து மீண்டும் போட்டியிடுகிறார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். அவர் தற்போது தொகுதியில் வாக்கு சேகரித்து வருகிறார். அப்போது குமரி மாவட்ட மீனவ கிராமங்களுக்கும் சென்று அவர்களிடம் வாக்குகள் சேகரித்து வருகிறார். இந்நிலையில் ஒரு கிராமத்தில் மீனவர்கள் தூண்டில் வளைவு குறித்துக் கேட்டபோது, உடனே செய்து தருவதாக உறுதி கூறினார்.

இதுகுறித்து மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனின் அலுவலக செய்திக் குறிப்பில் கூறப்பட்டதாவது…

கன்னியாகுமரியில் பிரச்சாரத்திற்காக பொன் ராதாகிருஷ்ணன்  இன்று (02/04/2019) கடியப்பட்டினம் சென்றபோது அங்கிருந்த மீனவ கிராமத்தில் உள்ள மீனவ நண்பர்கள் அவரை அன்புடன் வரவேற்று, தங்களது ஊருக்கு தூண்டில் வளைவு அமைத்து தரும்படி கோரிக்கை விடுத்தனர்.!

ponnar kanyakumari2 - 2026

இதை ஏற்று பேசிய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன், மத்தியில் மோடி அரசு அமைவது உறுதி என்று கூறி, அந்த அரசில் நான் அதிகாரமுள்ளவனாக இருக்க நீங்கள் எல்லாம் உறுதுணையாக இருந்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என்றும்  தூண்டில் வளைவு கண்டிப்பாக அமைத்துத் தர உடனடி நடவடிக்கை எடுப்பேன் என்றும் உறுதி அளித்தார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.