கார்த்தி சிதம்பரத்தைக் காப்பாற்ற ராகுல் போடும் வேடம்! அமித் ஷா காட்டம்!

Published:

coimbatore amitsha - 2026கோயமுத்தூரில் அமித் ஷா சிபி ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாகப் பேசினார். முன்னதாக புதுக்கோட்டை மாவட்டத்தில், ஹெச்.ராஜாவுக்கு ஆதரவாகப் பேசிய போது, கார்த்தி சிதம்பரத்துக்காக ராகுல் காந்தி வக்காலத்து வாங்குவது குறித்து குறிப்பிட்டார்.

கோயமுத்தூர் நாடாளுமன்றத் தொகுதியின் பாஜக., வேட்பாளராகப் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்துப் பேசினார் பாஜக., தேசிய தலைவர் அமித் ஷா.

coimbatore amitsha1 - 2026

அப்போது அவர், காங்கிரஸின் தேர்தல் அறிக்கை குறித்து ஒரு பிடி பிடித்தார். முன்னதாக, புதுக்கோட்டையில் பேசிய போதும் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில், குற்ற வழக்குகள் குறித்து உறுதி கூறப் பட்டிருக்கிறது. நாட்டில் ஒவ்வொரு பிரஜையும் உடனே பிணை பெறும் வகையில் குற்ற வழக்குகள் கையாளப்படும் என்று கூறியுள்ளார்.

coimbatore amitsha2 - 2026

எனில் அவரிடம் நான் கேட்க விரும்புவது, உங்கள் நண்பரான கார்த்திக் சிதம்பரம் போன்ற ஊழல்வாதியாக உள்ள மக்களை காப்பாற்றுவதற்காக நீங்கள் மேற்கொள்ளும் அதிதீவிர உத்தியா இது என்று கேட்கிறேன் என பேசினார்.

ALSO READ:  வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

Related articles

Recent articles

spot_img