கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் ஹெச்.ராஜா தரிசனம்

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் நெல்லை லைஃப் ஸ்டைல்

HRaja keelapavoor2 - 2026கீழப்பாவூர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா தரிசனம் செய்தார்.

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே, பாவூர்சத்திரத்தை அடுத்து உள்ள கீழப்பாவூரில் 16 திருக்கரங்களுடன் அபூர்வ ஸ்ரீநரசிம்மர் கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலுக்கு செவ்வாய்க் கிழமை பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா வருகை தந்தார். அவரை கோயில் நிர்வாக அதிகாரி யக்ஞ நாராயணன், கோயில் அர்ச்சகர் அனந்தன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

HRaja keelapavoor1 - 2026

கோயிலில் அமைந்துள்ள பெருமாள் மற்றும் நரசிம்மரை தரிசனம் செய்த அவர், கீழப்பாவூரில் உள்ள சாம்ராஜ்ய லட்சுமி நரசிம்மர் பீடத்திற்கு சென்று வழிபட்டார். அவருடன் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.