nayanthara1 1 - 2026இதிகாசத்தில் ஒன்றான இராமயணத்தை வைத்து பல திரைப்படங்கள் வந்திருக்கின்றன.

இந்நிலையில் இராமாயணத்தை ‘3டி’யில் படமெடுக்க இயக்குனர் நிதிஷ் திவாரி மற்றும் ரவி உத்யவார் ஆகியோர் இணைந்து இயக்க இருக்கிறார்கள்.

ரூ.1,500 கோடி செலவில் மூன்று பாகங்களாக தயாராகிறது. பிரபல தெலுங்கு பட அதிபர் அல்லு அரவிந்த் தயாரிக்கிறார்.

இந்த படத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி மொழிகளில் உள்ள பிரபலமான்  நடிகர்-நடிகைகள் நடிக்க உள்ளனர்.

சீதை வேடத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.ஏற்கனவே தெலுங்கில் வெளியான ஸ்ரீராமராஜ்ஜியத்தில் சீதையாக நயநன்தாரா பாலகிருஷ்ணாவுடன் இணைந்து நடித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending