
பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் இராணுவ நடவடிக்கையில், இந்தியா பெற்ற வெற்றியைக் கொண்டாடும் விதமாக செங்கோட்டையில் பாஜகவினர் தேசியக்கொடியை ஏந்தியவாறு சிந்தூர் யாத்திரை மேற்கொண்டனர்.
பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்திய இராணுவ நடவடிக்கையில், இந்தியா பெற்ற வெற்றியைக் கொண்டாடும் வகையில், தமிழகம் முழுவதும் 4 கட்டங்களாக சிந்தூர் யாத்திரை நடத்தப்படும் என தமிழக பாஜக தலைமை அறிவித்திருந்த நிலையில், இன்றைய தினம் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி பாஜக., சார்பில் செங்கோட்டை பகுதியில் சிந்தூர் யாத்திரையானது நடைபெற்றது.
தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் அய்யாச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த சிந்தூர் யாத்திரையில் ஏராளமான பாஜகவினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பங்கேற்று தேசிய கொடியை ஏந்தியவாறு யாத்திரை சென்றனர்.
தாலுகா அலுவலகம் முன்பு உள்ள சந்திப்பில் தொடங்கிய இந்த சிந்தூர் யாத்திரையானது காவல் நிலையம் வழியாக சுமார் 2 கி.மீ. வரை பேரணியாகச் சென்று மீண்டும் தாலுகா கார்னர் வரை நடைபெற்றது. இந்த யாத்திரையில் ஏராளமான பாஜக,ம்வினர் பங்கேற்று பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா நடத்திய இராணுவ நடவடிக்கையின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக பாரத் மாதாகி ஜெய் என்ற கோஷங்களுடன் யாத்திரையில் பங்கேற்றனர்.





