
குப்பையாகும் ஆயுதங்களால் கை நழுவும் வல்லரசுகளின் ஆதிக்கம்!
- முரு தெய்வசிகாமணி
சில ஆண்டுகளுக்கு முன்பு ஃபிலிம் கேமிராவும், PCO, Browsing Centre என்பது போன்றவை கோலோச்சும் பிஸினஸாக இருந்தது. இன்று அந்தத் தொழிலை மட்டுமே நம்பி இருந்ததால் அவரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகிவிட்டதல்லவா? அதுபோல பாதுகாப்பு விஷயத்தில் மிகப்பெரிய சக்ர வியூகமாக நினைத்துக் கொண்டிருந்த டெக்னிக்குகள் ஒரே ஒரு போரில் காயலாங்கடை மேட்டராகிவிடும்.
இவை அவ்வப்போது பெரிய போர் வரும்போதுதான் தெரியும் என்றாலும், போரில் மோதுகிற நாடுகள் ஓரளவிற்காவது சம பலத்துடன் இருக்க வேண்டும். அப்போதுதான் அது போன்ற விஷயங்கள் வெளிவரும்.
ஆர்மீனியா, அஜர்பைஜான் போர் என்பது முதன்முதலில் ட்ரோன்களை வைத்து ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்க காரணமாக இருந்தது. அது உக்ரைன் மற்றும் காஸாவில் இஸ்ரேலுடன் நடந்த போரில் முக்கியமாக கவனிக்கப்பட்டது.
அதன் விளைவாக ட்ரோன்கள் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்தது. துருக்கிக்கு கோடிக்கணக்கான ஆர்டர்கள் குவிந்தது. அதன் விளைவாக துருக்கி தன்னை ஒரு மிகப்பெரிய சக்தியாக நினைத்து, அதன் மூலம் இஸ்லாமிய நாடுகளின் தலைவராக ஆகலாம் என கனவு கண்டது.
அதன் விளைவாக கடனில் மூழ்கிக்கொண்டு இருக்கும் பாகிஸ்தானுக்கு ஆயுதங்களைக் கொடுத்தது. அதன்படி, பாகிஸ்தானின் தாக்குதல் இந்தியாவிற்கு எதிராக பெரிய வெற்றிபெறும், அதன் மூலம் அதன் ட்ரோன் ராஜ்ஜியத்திற்கு பெற விளம்பரம் கிடைக்கும் என்று நம்பியது. ஆனால் இந்தியாவின் வான் பாதுகாப்பு அதை அர்த்தம் அற்றதாக்கிவிட்டது.
அதன் விளைவாக துருக்கியின் கோடிக்கணக்கான ட்ரோன் ஆர்டர்கள் கேன்சலாவதாக வரும் செய்திகள், ஏற்கனவே பொருளாதார நசிவில் இருக்கும் துருக்கிக்கு வருக்கி வாங்க காசில்லாத சூழலை நோக்கிச் செல்ல வைத்திருக்கிறது.
அதுபோல அமெரிக்கா, ரஷ்யா, சீனா என்று பல நாடுகள் ஸ்டெல்த் வகை விமானங்களுக்கு மில்லியன் கணக்கில் $ கொட்டி செலவு செய்து ஆராய்ச்சியில் ஐந்தாம் தலைமுறை விமானத்தை கண்டுபிடித்தது. ஆனால் இந்தியா அந்த பக்கம் போகவில்லை. அதற்கு காரணம் அதன் தேவையை நாம் ஏவுகணைகளை வைத்து செய்துகொள்ள முடியும் என்று எடுத்த முடிவு.
ஆபரேஷன் சிந்தூரில் ஒரு விமானம் கூட பாகிஸ்தான் எல்லையை கடக்கவில்லை, ஆனால் பாகிஸ்தானின் 11 முக்கிய ஏர்பேஸ்களில் 9 நாசப்படுத்தி சுடுகாடாக்கிவிட்டது. அதை சரி செய்ய வேண்டுமெனில் 100 பில்லியன் டாலர்கள் வேண்டும் என்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் மீண்டும் பழைய டெக்னாலஜிக்கு போக முடியாது, புதியதாக வாங்க வேண்டிவரும் என்பதால்.
ஆனால், இந்தியா புத்திசாலித்தனமாக ஐந்தாம் தலைமுறையை விட்டுவிட்டு, ஆறாம் தலைமுறை டெக்னாலஜியான நெட்வவொர்க் சென்ட்ரிக் நுட்பங்களை பயன்படுத்தியது. உதாரணமாக நமது ஆகாஷ்தீர் 64 வான் இலக்குகளை கண்டுபிடித்து அதில் 16 இலக்குகளை ட்ராக் செய்து, நான்கு இலக்குகளை சுட்டு வீழ்த்த முடியும்.
ஆகாஷின் இலக்கில் ட்ரோன் வார்ம்ஸ் அல்லது மஸ்ரூம் என்று நூற்றுக்கண்க்கில் வரும்போது ஒரு ஆகாஷ்தீரால் அதை சுட்டு விழ்த்த முடியாது. அப்போது ஒன்றுக்கு மேற்பட்ட ஆகாஷ்தீர்கள் அதை தடுக்க எங்கேஜ் ஆகியிருக்கும். ஆனால் இரண்டும் தனித்தனியாக வேலை செய்தால் ஒரே ட்ரோன் அல்லது மிஸைலை தடுக்க ஒன்றுக்கு மேற்பட்ட ராக்கெட்டுகளை நாம் ஏவி அதில் ராக்கெட்டுகளை வீணடிக்க வாய்ப்புண்டு.
அப்படி எதிர்பார்த்துதான் பாகிஸ்தான் நூற்றுக்கணக்கில் ட்ரோன்களையும், அதனுடன் மிஸைல்களையும் ஏவியது. ஆனால் நமது ஆகாஷ் சிஸ்டம் அதற்குள் இருக்கும் ஆறாம் தலைமுறை நெட்வொர்க் மூலம் தொடர்பை ஏற்படுத்தி எனக்கு கொருக்குபேட்டை, உனக்கு சைதாப்பேட்டை என்று பிரித்துக்கொண்டு வேலை செயததால் மிகச்சிறப்பாக தாக்குதலை தடுக்க முடிந்தது.
அதிலும் குப்பைகளையும், உண்மையான ஆயுதங்களையும் இனம் பிரிக்கும் அளவிற்கு அதன் தொழில் நுட்பம் சிறப்பாக இருந்ததால், சில வாரங்களாவது போர் நீடிக்கும் என்ற சீனாவின் எதிர்பார்ப்பு சில மணி நேரங்களில் பொய்த்துப்போனது மட்டுமல்ல துருக்கியின் சாம்ராஜ்யம் வழக்கம்போல தவறான முடிவால் மீண்டும் வீழ்ந்தது.
அப்படியென்றால் அமெரிக்கா கோடிக்கணக்கில் கொட்டி தயாரித்த ஐந்தாம் தலைமுறை விமானங்கள் குப்பையா கோப்பால்…?
அப்படித்தான் பார்க்கப்படுகிறது. ஆனால் அதை எப்படி வேறு வகைகளில் பயன்படுத்துகிறோம் என்பதில் அதற்கான பதில் அடங்கி இருக்கிறது
இந்தியாவின் மிகப்பெரிய பலம் அதன் மிஸைல்கள். அதன் அக்யூரசி இன்று உலகம் முழுவதில் உள்ள ஆராய்ச்சி கூடங்களில் விவாதிக்கப்படுகிறது.
அப்படியென்றால் நமக்கு விமானப்படையே தேவையில்லையே? எதற்காக நாம் ரஃபேலை அவ்வளவு விலை கொடுத்து வாங்கினோம்?
அப்படியில்லை, அதன் ரோல்கள் மாறுகிறது. அது முன்பு போல எதிரியின் எல்லைக்குள் புகுந்து ரிஸ்க் எடுத்து தாக்க வேண்டியதில்லை, மாறாக வானில் வட்டமிட்டு எதிரியின் விமானம் நம்மை தாக்கும் எல்லைக்குள் வந்துவிடாமல் பார்க்கிறது. அது மட்டுமல்ல, நமது ஏவுகணைகளை நிலத்தில் இருந்து வீசுவதை விட வானில் இருந்து பறந்துபோய் வீசினால் அதன் வேகமும், இலக்கும் துல்லியமாகவும் எளிதாகவும் அமைகிறது.
நாம் FoxBat என்ற ரஷ்யாவின் மிக் ரக விமானத்தை அன்று பெருமளவில் பயன்படுத்தினோம். ஆனால் ரஷ்யா அதை 25 ஆண்டுகளுக்கு முன்பே அதை வீசிவிட்டது. ஏன்னெறால் அதன் சேட்டிலைட்கள் அதன் வேலையை செய்துவிட்டது.
அதுபோன்ற நடைமுறை அனுபவம்தான் இந்தியாவின் மிகப்பெரிய பலம், அது இல்லாததால் சீனா டிரில்லியனில் கொட்டி செய்த அதன் ஹைடெக் விமானங்களும், வான் பாதுகாப்பும் காயலான்கடைக்கு கல்லாக்கட்ட உதவும் நிலைக்கு கொண்டு சென்றுவிட்டது.
இது ஒன்றும் ஏர்ஃபோர்ஸுக்கு மட்டுமல்ல, கடற்படையின் நிலை இன்னும் மோசம். ஆம், அமெரிக்காவின் மிக நவீனமான USS Herald முதல் பல விமானந்தாங்கி கப்பல்கள் நமது பிரம்மோஸின் தாக்குதலுக்கு தப்பிக்க முடியாது என்றாகிவிட்டது.
அப்படியென்றால் 1971-ல் அமெரிக்காவும், இங்கிலாந்தும் நம்மைச் சுற்றி வளைத்ததுபோல இன்று செய்தால், நம்மை காக்க ரஷ்யா வரவேண்டியதில்லை, நமது பிரம்மோஸில் அவர்களுக்கு ஜலசமாதியை நம்மால் கொடுக்க முடியும்! அதுமட்டுமல்ல, அன்றே நம் நண்பன் ரஷ்யா அவர்களை விரட்டியது நீர்மூழ்கி கப்பல்களால்தான். இன்று நம்மிடம் நமது கடல் எல்லையை காக்க போதுமானது உள்ளது.
அப்படியெனில் அமெரிக்காவிடமும், சீனாவிடமும் இருக்கும் அந்த கப்பல்கள் அர்த்தமற்றதாகிப்போக ஆரம்பித்துவிட்டது. அதனால்தான் ரஷ்யா பெரிய விமானந்தாங்கி கப்பலை கட்டவில்லை. அப்படியானால் நாம் எதற்காக கட்டுகிறோம்?
அந்தக் கப்பல்கள் சாதாரண காலங்களில் எல்லையை பாதுகாக்கத் தேவை. அதுமட்டுமல்ல, அதில் பயன்படுத்தப்படும் உயர் தொழில்நுட்பம், நமது கப்பல் கட்டும் திறனை உயர்த்த அவை மிக மிக அவசியம்.
மேலும், அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் நாடுகளைப் பிடித்து, அதன் எல்லையை நேரடியகவோ, மறைமுகமாகவோ விரிவாக்க வேண்டும் என்பது அதன் விருப்பம். ஆனால், நமக்கு அந்த எண்ணமும் இல்லை, தேவையுமில்லை!!
ஆனாலும் அமெரிக்காவும், சீனாவும் அதை சைகாலாஜிகல் வாருக்காக பயன்படுத்தும்போது, நாமும் நமது எல்லையை பாதுகாக்க எங்களிடமும் இருக்கிறது என்று பதில் சொல்லத் தேவை உண்டல்லவா?!
எனவே, ஆபரேஷன் சிந்தூர் பாகிஸ்தானுக்கு மட்டும் வாக்கரிசி போடவில்லை, அமெரிக்கா, சீனா, துருக்கி மட்டுமல்ல அரதப்பழசான பல டெக்னிக்குகளுக்கும் வாக்கரிசி போட்டிருக்கிறது என்பதால்தான் உலகெங்கும் இந்தியாவின் போர் யுக்திகள் விவாதிக்கப்படுகிறது!
காஷ்மீரில் கைவெச்சுப்பார் என்று கத்தினார்கள், சத்தமில்லாமல் அவர்கள் குரல்வளையில் காலே வைத்துவிட்டோம். அப்படியா PoK மீது கைவெச்சுப்பார் என்றார்கள், அங்குமட்டுமல்ல பாகிஸ்தான் முழுவதும் கரகாட்டம் ஆடி முடித்துள்ளோம்!
நாம் என்னதான் நமது ராணுவ, பொருளாதார பலத்தை எடைபோட்டு, ஜோதிடத்தை ஆராய்ந்து, ஆரூடங்களை கணக்கில் காட்டி வருங்காலம் இந்தியாவுடையது என்று சொன்னாலும் அதில் நடக்குமா என்ற ஏக்கம் நம்மை அறியாமல் சந்தேகத்தோடு ஒட்டிக்கொண்டு இருந்தது. அது இன்று விலகியது, புதிய நம்பிக்கை மலர்ந்தது.
நேற்றுவரை நாம் சீனாவுக்கு இணையாக இருப்பதாக நம்மை மதிப்பிட்டு கொண்டிருந்தோம். ஆனால் இன்று நம்மை அமெரிக்கா, ரஷ்யாவிற்கு இணையாக பேசுகிறார்கள் என்பதை நான் அதற்கு மேலாக இருக்கிறோம் என்றுதான் பார்க்கிறேன். அதை உலகம் விரைவில் உணரும்!





