துணி துவைத்துப் போடும் சிம்பன்சி குரங்கு! ஆச்சரியப்பட்ட பார்வையாளர்கள்!

அடடே... அப்படியா? உலகம் லைஃப் ஸ்டைல்
chimponsee washing colth - 2026

மனிதக் குரங்குகள் என்று ஆச்சரியமாகப் பார்க்கப் படும் சிம்பன்ஸி குரங்குகள், சில நேரம், மனிதர்களைப் போல் நடந்து கொள்ளும் என்று கூறுகிறார்கள். அதனை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு வீடியோ சமூகத் தளங்களில் வைரலாகி வருகிறது.

தென்மேற்கு சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள ஒரு மிருகக்காட்சிசாலையில் வளர்க்கப்படும் 18 வயதான சிம்பன்சி ஒன்று, பராமரிப்பாளர் தனது துணியைத் துவைப்பதைப் பார்த்து தானும் ஆர்வமாக துணி துவைக்கக் கற்றுக் கொண்டுள்ளது. அது பயிற்சியாளரின் டீசர்ட்டை அழகாக துவைத்து தூய்மையாக்கிக் கொடுப்பது பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

முதலில் நீரில் ஊறவைத்து சிறிது நேரம் சோப்பு போட்டு தேய்த்து, பின்னர் பிரஷ் கொண்டு நன்றாக அழுக்கு போக தேய்க்கிறது. பின்னர் தண்ணீரில் அலசோ அலசு என்று அலசி துவைக்கிறது. சிம்பன்சியின் துணி தோய்க்கும் அந்த ஒளிப்பதிவு இப்போது இணையத்தில் ஒரு வாரமாக சுத்தோ சுத்து என்று சுத்துகிறது.

சிம்பன்சி துணி தோய்க்கும் விதம் குறித்து பேசிய மிருகக்காட்சி சாலை ஊழியர்கள் குறிப்பிட்ட சிம்பன்சி சோப்பு மற்றும் பிரஷ் கொண்டு துணிகளை மிக நேர்த்தியாக மனிதர்களை போலவே பளிச்சென்று துவைக்கிறது என்கின்றனர்.

https://youtu.be/myy6bfs4tf4

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.