டிச.27, டிச.30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல்: தேர்தல் ஆணையர் பழனிசாமி புது அறிவிப்பு!

Published:

supreme court election commission - 2026

ஊரக உள்ளாட்சிகளுக்கு வரும் டிச.27 மற்றும் டிச.30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று கூறியுள்ளார் தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி.

மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், கூறியதாவது

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தேர்தல் நடைபெறும். டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெறும்.

இதன்படி, நாளை மறுநாள் அதாவது திங்கள் கிழமை முதல் வேட்பு மனுக்கள் தாக்கல் தொடங்கும்
ஜனவரி 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

ஏற்கெனவே அறிவித்தபடி டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும்.

வரும் ஜனவரி 11ம் தேதி,

மாவட்ட, ஒன்றியக் குழு தலைவர்களுக்கான மறைமுக தேர்தல்…
மாவட்ட, ஒன்றியக் குழு துணைத் தலைவர்களுக்கு மறைமுக தேர்தல்
ஊராட்சி மன்ற துணைத் தலைவர்களுக்கு மறைமுக தேர்தல் ஆகியவை நடைபெறும்.

ALSO READ:  ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல் அணிவித்து வழங்கல்!

கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் இல்லை

ஊரக உள்ளாட்சித் தேர்தல்

  • வேட்பு மனு தாக்கல் – 09.12.2019
  • வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் – 16.12.2019
  • வேட்பு மனுக்கள் பரிசீலனை – 17.12.2019
  • வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள் – 19.12.2019
  • முதல்கட்ட தேர்தல் – 27.12.2019
  • 2ம் கட்ட தேர்தல் – 30.12.2019
  • வாக்கு எண்ணிக்கை – 02.01.2020

வாக்குச்சாவடி முதல் கட்டம் 24680 இரண்டாவது கட்டம் 25008 வாக்கு சாவடிகளில் மொத்தம் 49688 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறும்.

2 கோடியே 58 லட்சத்து 70 ஆயிரத்து 941 வாக்காளர் வாக்களிக்க உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் அனைத்து ஊரக உள்ளாட்சி தேர்தல் மிண்ணணு வாக்குப்பதிவு மூலம் 114 வாக்குச் சாவடிகளில் முன்மாதிரியாக நடைபெறும்.

4 வண்ணங்களில் வாக்கு சீட்டு முறையில் வாக்கு பதிவு நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தெரிவித்தார்.

ALSO READ:  இலவச பஸ் வேண்டாம்; கட்டண பஸ் அனுப்பி உரிய மரியாதை கொடுங்க போதும்!

Related articles

Recent articles

spot_img