ரூ.1000 பொங்கல் பரிசுக்கு தடை இல்லை!

Published:

election commissioner pazhanisami - 2026

ரூ. 1000 க்கு தடையில்லை என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி கூறினார்.

உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க எந்தவித தடையுமில்லை என்று மாநில தேர்தல் ஆணையர் இன்று அறிவித்தார்.

முன்னதாக இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, ஏற்கெனவே அறிவித்த தேதியில் உள்ளாட்சி தேர்தல்..நடைபெறும் என்றார்.

நீதிமன்ற உத்தரவுப்படி 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் ஏற்கனவே அறிவித்த தேதிகளான டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறும்… என்றார் மாநில தேர்தல் ஆணையர்.

உச்ச நீதிமன்றம் தொடர்புடைய வழக்குகளின் ஆணையின்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள் தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்தார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: 27,30 தேதிகளில் நடக்க இருப்பதாக தமிழக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
வேட்பு மனு தாக்கல் :9.12.2019
மனு தாக்கல் கடைசி நாள் :16.12.219
வாபஸ் பெற கடைசி நாள்: 19.12.2019
வாக்குப்பதிவு: 27,30 தேதிகள் 7 மணி 5 மணி
வாக்கு எண்ணிக்கை:2.1.2020 அன்று
4.1.2020 வரை தேர்தல் விதி அமலில் இருக்கும்.
பதவி ஏற்பு 6.1.2020 அன்று என்று கூறியுள்ளார் பழனிசாமி.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் பிரமோத்ஸ்வம் தொடக்கம்!

Related articles

Recent articles

spot_img