June 24, 2021, 12:10 am
More

  ARTICLE - SECTIONS

  சுளுக்கு எடுக்கப் போறாங்களாம்! பாஜக., சூரர்களே என்ன செய்யப் போறீங்க?!

  டிவியில் அரை மணிக்கு ஒருமுறை - "ஸ்டாலின்தான் வாராரு - விடியல் தரப் போராரு"- "நான் ரெடி? நீங்க ரெடியா?"-

  body massage
  body massage

  தமிழக ஊடகங்கள் பலவற்றின் அஜெண்டா!

  1) எதிர்க்கட்சியாக இருந்த போது ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகளை – இப்போது எவரும் நினைவு படுத்திக் கேட்டுவிடக் கூடாது!

  2) எடப்பாடியார் மீது ஸ்டாலினும், அவரது கட்சியினரும் வைத்த குற்றச்சாட்டுகளை, இப்போது எவரும் இதே மாநில அரசின் மீது வைத்துவிடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்!

  3) லாக்- டவுன் போது எடப்பாடியார் மேல் வெறுப்பு வருவது போல் கையாண்ட செய்தித் தலைப்புகளை இப்போது மாநில அரசு மீது வெறுப்பு வராத வண்ணம் கவனமாகத் தலைப்பு செய்தி தர வேண்டும்!
  உதாரணம்:- “ஊரடங்கை ஒட்டி சொந்த ஊர்களுக்குத் திரும்ப அலை மோதும் கூட்டம் – மக்கள் அவதி! பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீர் பேட்டி! (இது எடப்பாடிக்கு)
  ஊரடங்கை ஒட்டி மக்கள் பாதுகாப்பாகத் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பெருமளவில் திரும்பினர்! (இது ஸ்டாலினுக்கு)

  4) நான்காவது மிக முக்கியமான அஜெண்டா: இது அத்தனைக்கும் மோடிதான் காரணம் – பாவம் ஸ்டாலின் என்ன செய்வார்?
  இந்த எண்ணத்தை மக்களிடம் ஆழமாகப் பதிய வைக்க வேண்டும்!

  5) மோடி விவசாயிகளுக்கான தொகை ரூ 2000/ த்தை 9.50 கோடி விவசாயிகளின் கணக்கில் நேரடியாக செலுத்தியதை மீடியா பேசாது!

  6) அதே ஸ்டாலின் அரசு 2000/ ரூபாய் உதவித் தொகை தருவதற்கு டோக்கன் கொடுத்து நேரடியாக மக்களை வரவழைத்து – கும்பல் கூட வைத்ததை தமிழ் மீடியா பேசாது!

  7) ஆக்ஸிஜன் ஆடிட் – எத்தனை மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது? அதில் எத்தனை பயன்படுத்தப் பட்டது? என்று கணக்கெடுக்கலாமா?- என்று மத்திய அரசு கேட்டதும் கேஜரிவால் அரசு அடித்த பல்டியை மீடியா பேசாது!

  ஆயிரம் உயிர்கள் போனாலும் பரவாயில்லை – ஸ்டெர்லைட் ஆலை இயங்க – ஆக்சிஜன் தயாரிக்கும் பொருட்டுக் கூட – அனுமதிக்க மாட்டோம் – அந்த ஸ்டெர்லைட் தரும் ஆக்ஸிஜன் எங்களுக்கு வேண்டாம் – என்று பேசிய தலைவர்களையும், போராளிகளையும் – இந்த மீடியா கொலைகாரர்களாக சித்தரிக்காது!

  இப்போது அவர்களின் ஒரே அஜென்டா….

  ஸ்டாலின் அரசு மீது எந்தக் குறையும் இல்லை…
  இத்தனை பிரச்னைகளுக்கும் –
  மக்கள் கூட்டம் கூட்டமாக ரெம் டெசிவர் மருந்துக்கு அலைமோதுவதற்கும் –
  ஆக்சிஜன் பெட் கிடைக்காமல் படுக்கைகள் நிரம்பி வழிவதற்கும்,
  சுடுகாட்டில் கூட எரிவாயு தகன மேடைகள் கிடைக்காமல் ஆன்லைனில் புக் செய்ய வேண்டிய நிலைக்கும்….
  கொலைகார மோடி அரசுதான் காரணம்!

  பாஜக புண்ணாக்குகளே என்ன செய்யப் போகிறீர்கள்?

  ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு சம்பந்தமாக ‘ஒன்றிய அரசு’ என்னென்ன உத்தரவுகளை, வழிகாட்டுதல்களை மாநில அரசுகளுக்கு – குறிப்பாக தமிழகத்துக்கு – வழங்கியது என்பதை தேதிவாரியாக ஆதாரத்துடன் குறிப்பிட்டு நாளிதழ்களில் முழுப் பக்க விளம்பரம் தருவீர்களா?

  அப்படி ‘ஒன்றிய அரசு’ பிறப்பித்த உத்தரவுகளை கேஜ்ரிவால் அரசு எந்த லட்சணத்தில் அமல் படுத்தியது என்பதை அம்பலப் படுத்தி விளம்பரம் தரவே மாட்டீர்களா?

  ஏன் முழுப் பக்க விளம்பரமோ, தொலைக்காட்சிகளில் விளம்பர ஸ்லைடோ ப்ரைம் டைமில் போடக் காசே இல்லையா உங்கள் கட்சியின் பிரசாரப் பிரிவிடம்?

  டிவியில் அரை மணிக்கு ஒருமுறை – “ஸ்டாலின்தான் வாராரு – விடியல் தரப் போராரு”- “நான் ரெடி? நீங்க ரெடியா?”- விளம்பரம் ஏற்படுத்திய தாக்கத்தைப் பார்த்துமா புத்தி வரவில்லை உங்களுக்கு?

  அட, புள்ளிவிவரம் எல்லாம் வேண்டாமய்யா! …… மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தயாரித்துள்ளது இந்தியா!

  மத்திய அரசு மாநில அரசுகளுக்கு இன்னின்ன தேதியில் இன்னின்ன உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது – என்று சுருக்கமான விவரங்களுடன் முழுப்பக்க விளம்பரம் – மத்திய அரசு செய்தி மற்றும் தகவல் துறை மூலமாகவே தரலாமே?

  டிவி க்களில் பத்து – பதினைந்து செகண்ட் – கார்டு கூடவா போட முடியாது?

  “கொரானா, தடுப்பூசி, ஆக்சிஜன் சிலிண்டர் பிரச்னைகளில் உங்கள் அரசு அக்கறையுடன் செயல்படுகிறது – வதந்திகளை நம்பாதீர்கள்!”- என்று வரி விளம்பர ஸ்லைடு கூடவா போட வசதி இல்லை மத்திய அரசிடம்? அல்லது பாஜக அகில இந்தியத் தலைமைதான் கட்சி செலவில் – “வதந்திகளை நம்பாதீர்”- விளம்பரம் போடாதா?

  எப்போதய்யா பாஜக தலைமை புண்ணாக்குகளா விழித்துக் கொள்ளப் போகிறீர்கள்?

  மக்கள் மனதில் மோடி வெறுப்பு, மீடியா பிரசாரம் நன்றாக ஆழமாக இறங்கிய பிறகு!

  ‘கொலைகார மோடி’- தான் கொரானா பரவலுக்குக் காரணம் – மாநில அரசுகளை வஞ்சித்த ஈவு இரக்கமற்ற கொலைகார மத்திய அரசு!’-

  இந்த எண்ணம் நன்றாக ஆழமாக மக்கள் மனதில், மீடியாக்களின் வெறுப்புப் பிரசாரத்தால், ஆழமாக இறங்கிய பிறகு…

  சாவகாசமாக முழ நீளத்துக்கு சிக்கலான STATISTICS – சாமான்ய மக்களுக்குப் புரியாத கணக்கீடுகளுடன் தந்து- ஏதோ எங்கள் கடமையை நாங்களும் ஆற்றிவிட்டோம் என்று…

  2024 லும் தமிழகத்தில் ஒரு MP கூட ஜெயித்து வர முடியாத நிலையை கடுமையாக உழைத்து உருவாக்கப் போகிறீர்கள்!
  அப்படித்தானே!

  • முரளி சீதாராமன்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  [orc]

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  24FollowersFollow
  74FollowersFollow
  1,262FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-